Saturday, October 5, 2024
Home > செய்திகள் > பிஜேபி மாநில துணைத்தலைவருடன் இணைந்த சிரியன் திருச்சபை..! கோயம்புத்தூரில் அசத்தல்..!

பிஜேபி மாநில துணைத்தலைவருடன் இணைந்த சிரியன் திருச்சபை..! கோயம்புத்தூரில் அசத்தல்..!

பாரத பிரதமர் மோடியின் கனவான தூய்மை இந்தியா திட்டம் நாடெங்கும் பல சமூக ஆர்வலர்கள் விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் என பலராலும் முன்னெடுக்கப்பட்டு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கெடுத்து தங்கள் அளப்பரிய சேவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பிஜேபி துணைத்தலைவரான பேராசிரியர் கனகசபாபதி கோயம்புத்தூர் சிரியன் சர்ச் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை பொதுமக்கள் சிலருடன் சேர்ந்து மேற்கொண்டார். அப்போது சிரியன் சர்ச் நிர்வாகமும் அந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது.

`

மேலும் தூய்மை இந்தியா திட்டத்தில் ஈடுபட்டு குப்பைகளை அகற்றிய பேராசிரியர் கனகசபாபதி அவர்களை சிரியன் சர்ச் பாதிரியார் மனம் திறந்து பாராட்டினார். இது அங்கிருந்த பொதுமக்களிடையே மேலும் ஆர்வத்தை உண்டுபண்ணியுள்ளது.

```
```

…நம்டிவி/ தீபன் பாலாஜி

#swatchbharat #narendramodi #tnbjp