Monday, December 2, 2024
Home > அரசியல் > கர்மவீரரை கழற்றிவிட்ட காங்கிரஸ்..! கையிலெடுத்த அண்ணாமலை.கே..!

கர்மவீரரை கழற்றிவிட்ட காங்கிரஸ்..! கையிலெடுத்த அண்ணாமலை.கே..!

இன்று கர்மவீரர் காமராஜரின் 46ஆவது நினைவுதினத்தையொட்டி பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரை ஒரு சாதிக்குள் அடைத்துவிட்டதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் காலூன்ற காரணமான கர்மவீரர் காமராஜரை காங்கிரஸ் மறந்துவிட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கர்மவீரர் அவர்களின் 46ஆவது நினைவுதினத்தையொட்டி தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை கே மற்றும் தமிழக பிஜேபி தலைவர்கள் காமராஜர் சமாதிக்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்தினர்.

`

அப்போது பேசிய அண்ணாமலை அவர்கள் “ராகுல் காந்தியோ சோனியாவோ இல்லை தமிழக காங்கிரஸ் தலைவர்களோ கர்மவீரர் காமராஜர் அவர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை. சோனியா மற்றும் ராகுல் காந்தி இருவரும் இன்றுவரை காமராஜர் சமாதிக்கு ஒரு முறை கூட வந்ததில்லை” என அண்ணாமலை.கே அவர்கள் தெரிவித்தார்.

```
```

….உங்கள் பீமா

#kamarajar46 #tnbjp #annamalaik