மோகன் ட்ரீமர் என்பவரது இயக்கத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் திரைப்படம் வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்தது. அந்த திரைப்படத்தை தடைசெய்ய பல்வேறு அமைப்புகள் முயன்றும் நேற்று அதிரடியாக அத திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் அந்த திரைப்படத்தை ஒரு சிலர் விமர்சித்தாலும் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தை விமர்சனம் செய்த பல பத்திரிக்கைகள் தவறான முன்னுதாரணம் என கூறுகின்றன.
அதிலும் கார்ப்பரேட் ஊடகமான பிபிசி அலறுவதை பார்க்கையில் மிக சந்தோசமாக உள்ளது என பலர் அந்த விமர்சனத்தின் பின்னூட்டத்தில் பதிவிட்டு வருகின்றனர். அனந்த விகடன் மற்றும் புதிய தலைமுறை போன்ற லோக்கல் ஊடகங்கள் காரசாரமாக விமர்சித்து வருகின்றன.
இந்த தவறான விமர்சனங்களை தாண்டி நேற்று ஒரே நாளில் முதலீடு செய்த தொகையை தயாரிப்பாளர் எடுத்துவிட்டார் என தயாரிப்பு நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று இந்திய அளவில் #ருத்ரதாண்டவம் என ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
….உங்கள் பீமா
#ruthrathandavam #mohang