11-12-21/17.09pm
சென்னை : தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறது என பிஜேபியினர் மட்டுமன்றி தமிழக மக்களும் தற்போது பரவலாக பேச ஆரம்பித்துள்ளனர்.
பிஜேபி பிரமுகர் கல்யாணராமன் தொடங்கி நாகர்கோவிலை சேர்ந்த அப்பாவி இளைஞர் ஷிபின் வரை சமூக வலைத்தளங்களில் கருத்துக் கூறிய ஒரே காரணத்திற்க்காக கைது செய்யப்பட்டிருப்பதாக பிஜேபியினர் கடும் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். இந்நிலையில் 10.30க்கு போடப்பட்ட டீவீட்டுக்கு சரியாக ஒரு மணிநேரத்தில் எப்.ஐ.ஆர்.பதியப்பட்டு அடுத்த அரைமணிநேரத்தில் எழுத்தாளர் மாரிதாஸ் வீட்டின் முன் குவிந்தது காவல்துறை.
இவ்வளவு வேகத்தை எந்த வழக்கிலும் கண்டதில்லை என பொதுமக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். அதே போல நாகர்கோவிலை சேர்ந்த வெளிநாடு சென்று திரும்பிய ஷிப்பிங் என்பவரை நேற்று காவல்துறை கைது செய்துள்ளது. இது எல்லாமே அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பிஜேபியின் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் கருத்து சுதந்திரம் பற்றி பேசிய திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வதாகவும் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
திமுகவினர் பாரத பிரதமர் மோடியை ஆபாசமாக பேசிய வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் இதற்க்கு எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளனர். இதனிடையே தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை ஒரு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் மக்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு அலுவலகங்களில் அமரவேண்டும் என அறிவித்திருக்கிறார்.
மேலும் கமலாலயத்தில் தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பொதுமக்கள் தொண்டர்கள் என அனைவரும் இந்த போராட்டத்தில் நாளை பங்குபெறுவார்கள் என்றும், அந்த நிகழ்வில் எந்த நிருபர் கேள்வியெழுப்பினாலும் திமுகவின் சர்வாதிகார போக்கை குறிக்கும் வகையில் சைகை மொழியில் பதிலளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாநில ஐடி விங் தலைவர் சி.டி.நிர்மல் குமார் தனது ட்விட்டரில் இந்த அறிவிப்பை பகிர்ந்து #TN_ GOONDAS_RULE என பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் ஹேஸ்டேக் விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
….உங்கள் பீமா