Friday, March 29, 2024
Home > அரசியல் > பினராயி மகளுக்கு நடந்தது கல்யாணமல்ல விபச்சாரம்..? இஸ்லாமிய தலைவரின் சர்ச்சை பேச்சு..!

பினராயி மகளுக்கு நடந்தது கல்யாணமல்ல விபச்சாரம்..? இஸ்லாமிய தலைவரின் சர்ச்சை பேச்சு..!

11-12-21/18.40pm

கோழிக்கோடு : கடந்த வியாழன்று கோழிக்கோட்டில் நடந்த இந்திய முஸ்லீம் லீக் மாநாட்டில் பேசிய ஒரு தலைவர் பினராயி மகளுக்கு நடந்தது திருமணமல்ல விபச்சாரம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள பினராயி அரசு சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் வக்ப் வாரிய உறுப்பினர்கள் இனி பப்ளிக் சர்விஸ் கமிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிட்டிருந்தது. இது இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த டிசம்பர் 9 அன்று இந்திய முஸ்லீம் லீக் யூனியன் சார்பில் பேரணி ஒன்று நடைபெற்றது.

அதில் முன்னாள் DYFI மாநில தலைவரும் தற்போதைய IUML மாநில செயலாளருமான அப்துரஹுமான் கல்லாயி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ” பொதுப்பணி துறை அமைச்சரின் உதவியாளரும் எனது பகுதியை சேர்ந்தவருமான முஹம்மது ரியாஸ் யார். அவரது மனைவி யார். அவர்களுக்கு நடந்தது திருமணமா. இல்லை அது விபச்சாரம்.

`

இதை பொதுவெளியில் முன்னாள் முதல்வர் கோயா போல தைரியம் வேண்டும். வீணா பின்ராயனுக்கும் ரியாஸுக்கும் நடந்த திருமணம் சட்டவிரோதமானது. அது விபச்சாரம்” என கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் பினராயி மீது சாதிய ரீதியாக தாக்கி பேச பெரும் சர்ச்சை வெடித்தது.

அதை தொடர்ந்து கல்லாயி பகிரங்க மன்னிப்பு கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனிடையே சன்னி மதகுருக்களிடம் பேசிய பினராயி விஜயன் தேர்வின் மூலம் வக்ப் வாரியத்திற்கு பணிநியமனம் செய்வது பல கட்ட ஆலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே முடிவு செய்யப்படும் என கூறியதாக வக்ப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

```
```

இந்தியாவில் கருத்து சுதந்திரம் என்பது பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டுமே எதிர்பார்க்கப்படும் வேண்டும் மற்ற மாநிலங்களில் கருத்துக் குரல்வளை நசுக்கப்படும் என்றும் நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா