சட்டசபையில் பிஜேபி தரப்பு எம்.எல்.ஏக்கள் யாரும் ஆளும் கட்சிக்கு எதிராக கேள்விகளை முன்வைப்பதில்லை என சிலர் விமர்சித்து வருகின்றனர். செப்டம்பர் 17 ஈ.வே.ராமசாமி பிறந்தநாளை தமிழக அரசு சமூக நீதி நாளாக கொண்டாடும் என சட்டசபையில் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
அதை பிஜேபி எம் எல் ஏக்கள் யாரும் எதிர்த்து குரல்கொடுக்கவில்லை என பிஜேபி தொண்டர்கள் விமர்சித்தனர். ஆனால் எம் ஆர் காந்தி உட்பட அனைத்து பிஜேபி எம் ஏக்களும் தேவைப்படும் நேரத்தில் தங்களது வலுவான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று நயினார் நாகேந்திரன் அவர்கள் சட்டசபையில் பேசும்போது “செப்டம்பர் 17 ஈ.வே.ராமசாமி பிறந்தநாளை தமிழக அரசு சமூக நீதி நாளாக கொண்டாடுவதை பிஜேபி வரவேற்கிறது.” என கூறினார். இதனால் தொண்டர்கள் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
ஆனால் இன்று ஒரே கேள்வியில் தன மீதான தவறான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் நயினார். சட்ட சபையில் முதல்வர் முக ஸ்டாலின் CAA மத நல்லிணக்கத்திற்கு எதிரானது என குறிப்பிட்டார். உடனே எழுந்த நயினார் நாகேந்திரன்,
“இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாத ஒரு முதல்வர், மத நல்லிணக்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.” என கூறினார். தற்போது நயினார் அவர்களின் பதிலடியை தொண்டர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
…உங்கள் பீமா