Monday, December 2, 2024
Home > செய்திகள் > சவுதியில் அதிரடி..! தப்லிகி ஜமாஅத் அமைப்புக்கு தடை..!!

சவுதியில் அதிரடி..! தப்லிகி ஜமாஅத் அமைப்புக்கு தடை..!!

11-12-21/15.27pm

சவூதி அரேபியா : சவுதியில் தப்லிகி ஜமா அத் அமைப்புக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து மினிஸ்ட்ரி ஆப் இஸ்லாமிக் மினிஸ்டரியை சேர்ந்த அமைச்சர் அப்துல்லத்தீப் அல்ஷேக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ” நாட்டில் உள்ள அனைத்து மசூதிகளும் மதபோதகர்களும் வருகிற வெள்ளிக்கிழமையன்று பள்ளிவாசலில் ஒன்று கூடவேண்டும். அந்த கூட்டத்தில் தப்லிகி ஜமாத் அமைப்பு பற்றிய கீழ்க்காணும் எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும்.

தவறான அணுகுமுறை மற்றும் கையாளுதல் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு வாசலாக செயல்படுவது குறித்து விளக்க வேண்டும். அந்த அமைப்பின் மூல தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அவர்கள் சமூகத்திற்கு எவ்வளவு ஆபத்தானவர்கள் என குறிப்பிட்டு மக்களிடையே பேசுங்கள்” என இஸ்லாமிய மதபோதகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

`

மேலும் சமீப காலமாக பாரத பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் சவுதி இந்தியாவுடன் அதீத நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இஸ்லாமியர்கள் மட்டுமே வாழும் சவுதியில் இந்துக்களின் கோவில்களை திறப்பது மகாபாரதம் ராமாயணம் போன்ற இந்துக்களின் இதிகாசத்தை பள்ளிகளில் கட்டாயமாக்கியது என மதசார்பற்ற நிலைப்பாட்டை உண்மையான இஸ்லாமியர்கள்வாழும் நாடு முன்னெடுத்து வருகிறது.

```
```

ஆனால் இங்கு இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் இந்துக்கள் தங்களது கோவில் தேரை கூட கொண்டு செல்லமுடியாத அவலநிலையில் உள்ளனர் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சமீபத்தில் பிரபலமான கோவில் ஒன்றின் தேரை இஸ்லாமியர் ஒருவர் எரிக்க முயன்று பொதுமக்களால் பிடிபட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

….உங்கள் பீமா