11-12-21/13.58pm
சென்னை : தமிழகத்தின் டிஜிபியாக மக்கள் மனம் கவர்ந்த சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டதும் பொதுமக்கள் இளைஞர்கள் மாணவ மாணவியர் என அனைவரும் அவரை வாழ்த்தி வரவேற்றனர். அந்த அளவுக்கு சைலேந்திர பாபு எளிமையானவர் மட்டுமல்ல நேர்மையானவர் என பெயரெடுத்தவர்.
ஆனால் அவர் பதவிக்கு வந்த பின்னரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீரமையவில்லை என பல்வேறு தரப்பினர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். அதற்க்கு எடுத்துக்காட்டாக பல சம்பவங்களை கூறுகின்றனர் பொதுமக்கள். நேற்று முன்தினம் விழுப்புரம் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர் பேருந்து நடத்துனர் ஒருவராலேயே பாலியல் அத்து மீறலுக்கு உட்படுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. மேலும் நேற்று ஓடும் பேருந்தில் ராமநாதபுரம் அருகே பேருந்தை மடக்கி நான்கு பேர் அரிவாளால் வெட்டி சாய்க்கப்பட்டது இன்னும் பேரதிர்ச்சியை தமிழகத்தில் உண்டுபண்ணியுள்ளது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக 10 வயது சிறுவன் திடகாத்திரமான காவல்துறை அதிகாரியை கொலை செய்தான் என கூறி சிறையிலடித்திருப்பது காவல்துறையினர் மற்றும் ஆட்சியாளர்கள் மீது சந்தேகம் வரவைப்பதாக அரசியல் கட்சி தலைவர்களே விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்தடுத்து பிஜேபி தொண்டர்கள் மற்றும் பிஜேபி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் பிஜேபியை சேர்ந்த கன்னியாகுமரி இளைஞர் ஷிபின் கைது செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து போராட்டம் நடத்திய பிஜேபி தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ” இந்தியாவில் சைபர் குண்டாஸ் என்று எங்கேயாவது போடப்பட்டிருக்கிறது என உங்களால் காண்பிக்க முடியுமா. ட்விட்டரில் போட்ட பதிவுக்காக குண்டாஸ் போடப்பட்டுள்ளது என காண்பிக்க முடியுமா. இங்கே டிஜிபிக்கு கண்ட்ரோல் இல்லை. டிஜிபியை பொறுத்தவரை சைக்கிளில் போவது செல்பீ எடுப்பது போட்டோ போடுவது டீ குடிப்பது என பிசியாக இருக்கிறார். ஆட்சியை நடத்துவது வேறு யாரோ. எல்லாமே ஒரு எல்லை வரைதான்.
CRPC (CRIMINAL PROCEDURE CODE) இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஒன்று தான். தமிழ்நாட்டில் இதைப்போல ஒரு கருத்து பதிவிட்டால் இந்தியாவில் எந்த மாநிலத்திலிருந்து வேண்டுமானாலும் தமிழ் தெரிந்த யாரும் வழக்கு பதிவு செய்யலாம். எந்த காவல்துறை அதிகாரியும் கைது செய்யலாம் என்பது நினைவிருக்கட்டும். பதினேழு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். இதை திமுக அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக விடுக்கிறேன். இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும்.
பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. ஒரு அளவு இருக்கிறது. சும்மா சும்மா கைவச்சா பொறுத்துக்க கொண்டு இருக்கமாட்டோம்.” என திமுகவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை.
….உங்கள் பீமா