11-12-21/11.42am
தமிழகம் : முதல்வராக இல்லாதபோதும் மு.கருணாநிதிக்கு அரசியல் மாண்பு காரணமாக 21 குண்டுகள் முழங்கி இறுதி மரியாதை செய்யப்பட்டது. 21 குண்டுகள் யாருக்கெல்லாம் முழங்குகிறது. 17 குண்டுகள் யாருக்கெல்லாம் முழங்குகிறது. எதற்காக முழங்கப்படுகிறது என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
நமது இந்திய திருநாட்டில் மரணமடைந்த தலைவர்களின் இறுதிச்சடங்கில் 21 குண்டுகள் முழங்கப்படுவது வழக்கம். அதன் வரலாறு சுவாரஸ்யமானது. ராணுவ மரியாதையும் குண்டு முழக்கங்களும் எளிதில் யார்க்கும் வழங்கப்படுவதில்லை எனப்து குறிப்பிடத்தக்கது.
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தகுதி உள்ளவர்களாக கருதப்படுபவர்கள் முன்னாள், இந்நாள் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மாநில முதலமைச்சர் என ஒரு குறிப்பிட்ட உயர் பதவி வகித்தவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர். மாநில அரசுக்கும் இதில் முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. மரணமடைந்தவர் சமூகத்தில் ஆற்றிய பங்கு சிறந்ததாய் இருக்கும் பட்சத்தில் இதுகுறித்த முடிவை மாநில அரசும் எடுக்க உரிமை இருக்கிறது.
காலை இலக்கியம் சட்டத்துறை சமூகப்பணி என்ற எவற்றில் சிறந்து விளங்கியவர் யாவரும் தகுதியுடையவரே. இவர்களின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்துவதை பற்றிய முடிவை மாநில அமைச்சர் கேபினட் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து பணிகளை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்பார். இப்படி ஒருவர் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்போது ராணுவச்சடங்குகள் கடைபிடிக்கற ஒரு மரபு வானத்தை பார்த்து துப்பாக்கியால் சுடுதல்.
அப்படி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்போது அந்த ராணுவச் சடங்குகளுள் கடைப்பிடிக்கிற ஒரு வழக்கம், வானம் பார்த்து துப்பாக்கிச் சுடுதல். முதன்முதலாக கடற்படையிலேயே இந்த வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஒரு நாடு கடற்படையினர் மற்ற நாட்டின் எல்லைக்குள் செல்லும்போது தங்களிடம் உள்ள துப்பாக்கிளை கொண்டு வானில் சுட்டு தங்கள் ரவைகளை தீர்த்த பின்னரே எல்லைக்குள் அனுமதிக்கப்படுவர். இந்த வழக்கம் 17ம் நூற்றாண்டிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
நாளடைவில் ராணுவத்திலும் பயன்படுத்த ஆரம்பித்தனர். முன்னர் அரசர் காலத்தில் அரசர் மற்றும் அரச குடும்பத்தினர் இறஙர்ஹால் 101 குண்டுகள் முழங்கப்பட்டு வந்திருக்கிறது. இது ராஜ மரியாதை என கருதப்பட்டது. அரசர் என்றால் 101 குண்டுகளும் கவர்னர் என்றால் 9 குண்டுகளும் என பிரிட்டிஷார் வரையறுத்திருந்தனர்.
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் இந்த வேறுபாட்டை களைந்து 21 குண்டுகள் முழக்கம் என வரையறுத்தது. பின்னர், இது சர்வதேச முறையாக மாறியது. இறுதிச் சடங்கில் அரசு மரியாதையின்போது சுடப்படுகின்ற இந்தக் குண்டுகள் சோடியம் நைட்ரேட் என்கிற பவுடரால் தயாரிக்கப்படுகிறது. குண்டுகள் முழங்குதல் என்பது இறுதிச் சடங்குகளில் மட்டுமின்றி குடியரசுத் தலைவர் பதவியேற்பு, வெளிநாட்டு அதிபரை நம் நாட்டுக்கு வரவேற்கும்போது, குடியரசு தினம் என முக்கியமான அரசு விழாக்களில் இந்தப் வழக்கம் இருக்கிறது.
முக்கியமாக, துப்பாக்கி குண்டுகள் முழங்கியதும் அதில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள் கீழே விழுந்த குண்டுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதிமுறையும் உண்டு. ராணுவ மரியாதையில் செய்யப்படுகின்ற ஒவ்வொரு காரியத்துக்குப் பின்னாலும் இதுபோல பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அரசியல் தலைவர்கள் தவிர ராணுவ அதிகாரிகள் மற்றும் இதர உயர் அதிகாரிகளுக்கு 17 குண்டுகள் முழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற முப்படைத்தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது துணைவியார் மதுலிகா ஆகியோருக்கு இறுதி சடங்கில் 17 குண்டுகள் முழங்கப்பட்டது. அந்த வீடியோவை இதில் காணலாம். மேலும் மரணமடைந்தவர்களின் உடலின் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி அன்னாரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
…..உங்கள் பீமா