Monday, February 10, 2025
Home > அரசியல் > 48 மணிநேரம் கெடுவிதித்த முன்னாள் முதல்வர்..! கலக்கத்தில் சீப்பு செந்தில்

48 மணிநேரம் கெடுவிதித்த முன்னாள் முதல்வர்..! கலக்கத்தில் சீப்பு செந்தில்

2-4-22/9.29AM

சென்னை : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஊடகதர்மம் அற்றுப்போய் ஒருசார்புநிலை எடுத்துவிட்டதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் சமீபத்தில் துபாய் சென்றார். அவருடன் அவரது குடும்ப உறவினர்கள் மற்றும் சிலர் சென்றிருந்தனர்.

முதல்வரின் துபாய் பயணம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. இதுகுறித்து பலசந்தேகங்களை எழுப்பியிருந்தன. இதனிடையே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறு பரப்பும் விதமாக அவரும் தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாகவும் முதலீட்டு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்தையே அழைத்துப் போனதாகவும் சீப்பு செந்தில் என சமீபத்தில் நெட்டிசன்களால் செல்லமாக அழைக்கப்படும் நெறியாளர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “30-3-22 அன்று மாலைமுரசு தொலைக்காட்சியில் முரசரங்கம் நிகழ்ச்சியில் நெறியாளர் செந்தில்வேல் என்பவர் நான் தமிழக முதல்வராக இருந்தபோது தொழில் முதலீடுகளை ஈர்த்த லண்டன் அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு எனது மகனையும் உறவினர்களையும் அழைத்து சென்றதாகவும்,

`

கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்ய சென்றதாகவும் உண்மைக்கு புறம்பாக அபாண்டமாக வீண்பழி சுமத்தினார்.எனது நற்பெயருக்கு களங்கத்தை விளைவித்த அந்த நெறியாளர் மாலைமுரசு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் 48 மணிநேரத்திற்குள் மன்னிப்பு கேட்கவேண்டும்.தவறினால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பியுள்ளேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

```
```

இதனால் சீப்பு செந்தில் என செல்லமாக அழைக்கப்படும் செந்தில்வேல் தரப்பு ஆளும்கட்சி பெரும்புள்ளிகளை இந்தவிவகாரத்தில் தன்னை காப்பாற்றுமாறு கெஞ்சுவதாக செந்தில் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

…..உங்கள் பீமா