04-02-2022/16.10pm
மதுரை : தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சார்யா ஸ்வாமிகள் தன்னையும் மதம் மாற்ற முயற்சிகள் நடந்ததாக பகீர் குற்றசாட்டு ஒன்றை எழுப்பியுள்ளார்.

மதுரை ஆதீனமாக இருப்பவர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சார்யா ஸ்வாமிகள். இவர் ரங்கராஜ் பாண்டேவின் நேர்காணலில் கட்டாய மதமாற்றத்தை எதிர்த்து பல கருத்துக்களை முன்வைத்தார். அவரிடம் அரியலூர் மாணவி மரணம் பற்றியும் கட்டாய மதமாற்றம் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது.அப்போது அவர் கூறியதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கு இருந்த ஒரு பள்ளி வழியே நான் செல்லும்போது ஒரு ஆறாம் வகுப்பு மாணவி என்னிடம் தேவாரம் நூலை கேட்டு வந்கிபெற்றுக் கொண்டார். அதன்பின்னர் தன்னை நெற்றியில் திலகம் இட்டதால் கிறித்தவ பள்ளி நிர்வாகம் அடித்ததாக அந்த மாணவி என்னிடம் புகாரளிக்க நாங்கள் அந்த பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து பள்ளியின் அருகே போராட்டம் நடத்தினோம்.

அதன்பின்னர் பள்ளி நிர்வாகம் சமரசத்திற்கு வந்தது. மத வழிபாடு என்பதும் அதை பின்தொடர்வதும் அவரவர் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் கட்டாய மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பால் தருகிறேன் நெய் தருகிறேன் பொன் பொருள் தருகிறேன் என கூறி மதமாற்றம் செய்வது தவறான ஒன்று.
கட்டாய மதமாற்ற தடைச்சட்டம் உடனடியாக கொண்டுவரப்பட வேண்டும். இவ்வளவு ஏன் என்னையே மதம் மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள்.
பகவதி லட்சுமணன் என்கிற என்பெயரை மாற்றி பகத் என கூறினர். பின்னர் என் முகம் பார்க்க யேசுநாதரைப்போல இருப்பதாகவும் கூறி என்னை மதம் மாற்ற முயற்சிகள் செய்தனர். அதிலிருந்து நான் தப்பித்துவிட்டேன்” என மதுரை ஆதீனமே கூறியிருப்பது கட்டாய மதமாற்ற சட்டம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா