Friday, August 21, 2026
Home > செய்திகள் > ஹிஜாப்..! இளைஞருக்கு கத்திக்குத்து..! மூதாட்டி மீது கொடூர தாக்குதல்..!

ஹிஜாப்..! இளைஞருக்கு கத்திக்குத்து..! மூதாட்டி மீது கொடூர தாக்குதல்..!

12-2-22/10.20am

கர்நாடகா : கேரளாவில் கல்வி நிறுவனங்களுக்குள் ஹிஜாப் அணியக்கூடாது என்ற தடை விதித்தபோதிலும் அதைப்பேசாத ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பிஜேபி ஆளும் மாநிலமான கர்நாடகாவில் கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக பிஜேபியினர் கூறிவருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட ஆறுமாணவிகள் மட்டும் பலகாலமாய் இல்லாத வழக்கமாய் திடீரென ஹிஜாப் அணிந்து வந்து அதை பிரச்சினையாக்கி நாடுமுழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனப்பான்மையுடன் பிஜேபி செயல்படுவதாக ஒரு பிம்பம் கட்டமைக்க முயற்சிகள் நடப்பதாக நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே ஹிஜாப்புக்கு எதிராக வாட்சப் பதிவிட்ட இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

கர்நாடகா மாநிலம் ஜிகாலி வட்டம் மலேபென்னூர் பகுதியில் கடைநடத்தி வருபவர் திலீப். இவர் தனது வாட்சப் ஸ்டேட்டஸில் ஹிஜாப்புக்கு எதிராக கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் 300 பேருக்கும் மேலான இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் அவரது கடைக்குள் புகுந்து அவரை கொடுமையாக தாக்கியது. பின்னர் அவரை கடைக்கு வெளியில் இழுத்துவந்து கத்தியால் பலமுறை குத்தியது.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களையும் அந்த இஸ்லாமிய கும்பல் தாக்கியது. இதேபோல நல்லூர் மாவட்டத்தில் தாவங்கரே பகுதியில் ஹிஜாபுக்கு எதிராக பேசிய நவீன் என்பவரையும் அவரது 60 வயது தாயார் சரோஜா என்பவரையும் இஸ்லாமிய அடிப்படைவாத கும்பல் கடுமையாக தாக்கியது.

அதையடுத்து போலீசார் சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் போலீசாரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இருசமூகத்திற்குள் பிளவு ஏற்படுத்தும் வகையிலும் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலும் சில அடிப்படைவாதிகள் செயல்பட்டுவருவதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.

…..உங்கள் பீமா