Monday, December 2, 2024
Home > செய்திகள் > ஜோஸ் ஆலுக்காஸை கொள்ளையடித்த கும்பல்..! சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த போலீஸ்..!

ஜோஸ் ஆலுக்காஸை கொள்ளையடித்த கும்பல்..! சினிமா பாணியில் விரட்டிப்பிடித்த போலீஸ்..!

21-12-21/13.40pm

வேலூர் : ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் வேலூர் மக்களை அதிர்ச்சியடைய செய்தது. திருடர்கள் யாரென்று அடையாளம் தெரியாத நிலையில் ஒரே வாரத்தில் காவல்துறை அனைத்து நகைகளையும் மீட்டு கொள்ளையர்களை கொத்தாக அமுக்கியது.

வேலூர் காட்பாடி சாலையில் அமைந்துள்ளது பிரபல நகை விற்பனை நிலையமான ஜோஸ் ஆலுக்காஸ். இங்கு கடந்த டிசம்பர் 15ல் கட்டிடத்தின் பின்புறம் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் எட்டு கோடி மதிப்பிலான 15கிலோகிராம் தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர். இந்த கட்டிடம் நகரின் மையப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் சரியாக நோட்டமிட்டு கடையில் பொருத்தப்பட்டிருந்த 12 சிசிடிவி கேமராக்களின் மீதும் ஒரு வித ஸ்ப்ரேயை தெளித்தனர். அதன்பின்னரே வந்த வேலையை கவனித்திருக்கின்றனர். மறுநாள் காலையில் ஊழியர்கள் வந்து கடையை திறந்தபோது அதிர்ச்சிக்குள்ளாகினர். அதையடுத்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

`

அதை தொடர்ந்து அனைத்து எல்லைகளும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. தனிப்படை அமைக்கப்பட்டு அதிதீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஆறு நாள் தீவிர தேடுதலின் பலனாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுபவர்களை வேலூர் எஸ்பிஐ தலைமையிலான தனிப்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து நகைகளை மீட்டது. இதை தொடர்ந்து வேலூர் காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

```
```

இதுகுறித்து வேலூர் மக்கள் கூறுகையில் ” வேலூரை பொறுத்தவரை அசம்பாவிதங்கள் பெரிதாக ஏற்படுவதில்லை. காவல்துறையினர் நோவு பார்க்காமல் இரவிலும் ரோந்து வருகின்றனர். அதே நேரத்தில் சமீப காலங்களாய் நடக்கும் சிறுமிகள் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட பலாத்கார குற்றவாளிகளையும் விரைந்து பிடித்தால் தமிழக காவல்துறையின் மதிப்பு இன்னும் உயரும்” என கருத்து தெரிவித்தனர். கொடைக்கானல் திண்டுக்கல் மாங்காடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக செய்திகள் வருவது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா