Monday, February 10, 2025
Home > செய்திகள் > திருப்பத்தூர் : சினிமாவை விஞ்சிய சம்பவம்..! காவல்துறையினரை தாக்கிய திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள்..!

திருப்பத்தூர் : சினிமாவை விஞ்சிய சம்பவம்..! காவல்துறையினரை தாக்கிய திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள்..!

9-12-21/10.57am

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட திமுக பிரமுகரை அவரது ஆதரவாளர்கள் காவல் துறையினரை தாக்கி மீட்டுக்கொண்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது துத்திப்பட்டு கிராமம். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சுவிதா. இவரது கணவர் கணேஷ் திமுக பிரமுகர் மற்றும் பல திருட்டு வழக்கில் தொடர்புடையவர். இவரை போலீசார் பல நாட்களாக தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

`

இந்நிலையில் கணேஷ் திருட்டில் ஈடுபட்ட போது சிக்கிய சிசிடிவி ஆதாரங்களை கொண்டு அவரை போலீசார் கைது செய்தனர். திமுக பிரமுகரின் வீட்டிலிருந்து காரில் அழைத்து சென்ற போலீசாரின் வாகனத்தை சிறிது தொலைவிலேயே மடக்கினர். மேலும் காவல்துறையினரை தாக்கி கணேஷை விடுவித்த அந்த கும்பல் அருகிலுள்ள வெல்டிங் பட்டறையில் வைத்து கைவிலங்கை அறுத்து அவரை தப்பிக்க விட்டனர். தடுக்க முயன்ற போலீசாருக்கு பலத்த அடிகள் விழுந்ததாக கூறப்படுகிறது.

```
```

சினிமா சம்பவம் போல காவல்துறையினரை தாக்கி கைதியை விடுவித்த சம்பவம் திமுக அரசின் சட்ட ஒழுங்கு நிர்வாகத்தின் அவலநிலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவல்துறையினர் இருவர் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிபாதக்கது. மேலும் திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு தேவைப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா