Tuesday, June 17, 2025
Home > செய்திகள் > பட்ஜெட் 2022-23 உள்நாட்டு உற்பத்தியை வலுவூட்டுகிறதா..!?

பட்ஜெட் 2022-23 உள்நாட்டு உற்பத்தியை வலுவூட்டுகிறதா..!?

04-02-2022/16.60pm

மது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவான ஆத்ம நிற்பார் திட்டத்தை வலுவூட்டும் நோக்கத்தோடும், உள் நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வழிவகுக்கும் நோக்கில் இந்த 2022-2023 ஆண்டு பட்ஜெட் அமைந்துள்ளது.

இந்திய ராணுவ வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், ராணுவ பீரங்கிகள், துப்பாக்கி மற்றும் அதற்கு தேவையான குண்டுகள், பீரங்கி உபகரணங்கள், கை துப்பாக்கி போன்ற பல விதமான தேவைகளை உள் நாட்டிலேயே 68 சதவீதம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல வரும் காலங்களில் உலகின் முக்கிய உபகரணங்களில் ஒன்றாக உள்ளது ட்ரோன் டெக்னாலஜி. இதனை நம் நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மற்ற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், ராணுவ மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. இதனால் பல புதிய தொழில்நுட்ப விரிவாக்கத்தை நம் நாடு அடைய வாய்ப்புள்ளது.

அதேபோல எலட்ரிக் வாகனங்களுக்கு தேவையான வசதிகளை அதிகப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளில் பேட்டரி சார்ஜிங் வசதி, சார்ஜ் இறங்கிய பேட்டரிக்கு பதிலாக சார்ஜ் நிரம்பிய பேட்டரிகளை மாற்றிக்கொள்வது போன்ற புதிய வசதிகளை மேம்படுத்த இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

பா.ஜா.கா ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இந்த நிதி நிலை ஆண்டில் 25,000 கிலோ மீட்டர் எனும் இலக்கை அடைவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு முசிறி – நாமக்கல் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு மற்றும் விரிவு படுத்த 184.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல குடியாத்தம் புற வழி சாலை அமைப்பதற்கும் மங்களுரு – விழுப்புரம் இடையே புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு 221.03 கொடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

`

நாட்டின் மிக முக்கியமான மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இயற்கை முறையில் சூரிய மின்சக்தியை அதிகரிக்கும் நோக்கிலும் அதற்கு தேவையான சாதனங்களை உள் நாட்டு உற்பத்தியை அதிகரிக்க 19,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொபைல் சேவையில் 5ஜி டெக்னாலஜி இந்த ஆண்டு நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நெட்வொர்க் இணைப்பு மேலும் வலுப்படுத்தப் படும். 5ஜி அலைகற்று முறையான ஏலம் மூலம் பல கொடி வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு 900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது போன பட்ஜெட்டை விட 500 கோடி ருபாய் கூடுதல்.

இந்தியா முழுவதும் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் மருத்துவ வசதிகளை அதிகப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு 4,177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட 3500 கோடி கூடுதல் ஆகும். இதனால் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் புதிய மருத்துவ மனைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

```
```

இந்திய இரயில்வே துறை இந்த ஆண்டு 2000 கிலோ மீட்டருக்கு புதிய பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக நாடு முழுவதும் 400 இரயில்கள் அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு 3,865 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை போடி இடையே அகல ரயில் பாதையாக விரிவு படுத்தும் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2009-2013 வரை தமிழகத்திற்கு வேறும் 840 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சுற்றுலா துறையை மேம்படுத்த தனியார் துறைகளை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக 40 ரோப் கார்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மலை வாழ் மக்கள் வசதிக்காக புதிய கயிறு கொண்டு பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர பல தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரி பாகங்கள், இஞ்சினியரிங் சாதனங்கள் என
உள் நாட்டு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வாய்ப்புள்ளது.

இந்த பட்ஜெட் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும், 60 லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலை வாய்ப்பினை அதிக படுத்தும் வகையிலும், உள் நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் அமைந்துள்ளது.

செளந்தரராஜன் சேதுராமன், நங்கநல்லூர்