Friday, February 7, 2025
Home > செய்திகள் > தமிழகம் – கஞ்சா – அரசியல்..?

தமிழகம் – கஞ்சா – அரசியல்..?

14-12-21/ 11.10am

தமிழகம் : தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக போதை பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆங்காங்கே போதை வஸ்துக்கள் போதை தடுப்புப்பிரிவு போலீசாரால் கைப்பற்றப்படுவதுடன் சென்னை விமான நிலையங்களிலும் சமீப நாட்களாக அடிக்கடி கஞ்சா ஹெராயின் போன்ற போதை வஸ்துக்கள் பிடிபட்டு வருகின்றன.

இது தமிழகத்தின் எதிர்கால சமுதாயத்தை சீரழித்து வருகிறது என பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் ஸ்ரீலங்காவை சேர்ந்த ஒருவரிடமிருந்து தூத்துக்குடியில் 26 கிலோ நார்க்காட்டிக்ஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. அவர் தூத்துக்குடியிலிருந்து பல முக்கிய நகரங்களுக்கு அனுப்ப வந்தது.

இந்த சம்பவத்தை விட அதிர்ச்சிகரமான ஒன்று கடந்த இரு திங்களுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கிறது. திருப்போரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 33 கிலோ கஞ்சா பிடிபட்டிருக்கிறது. சிறுவர்கள் சாப்பிடும் வகையிலான சாக்லேட்டுகளில் இந்த கஞ்சாவை பதுக்கிவைத்துள்ளனர். கஞ்சா சாக்லேட் என பெயர் வேறு.

`

இதனிடையே மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விஷயமாக சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி எனும் பகுதியில் சாலையோரங்களில் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருக்கிறது. இதை ஊர் மக்கள் கவனித்து காவல்துறையினரிடம் தகவலளிக்க அவர்கள் செடிகளை தீவைத்து கொளுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

```
```

இந்நிலையில் திமுக எம்பியான கலாநிதி வீராசாமி பாராளுமன்றத்தில் பேசுகையில் “சிறிய அளவில் கஞ்சா பதுக்கி வைத்திருப்போர்களுக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை வழங்காமல் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பவேண்டும்” என கூறியுள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அடுத்தடுத்து போதைவஸ்துக்கள் பிடிபட்டு வரும் நிலையில் திமுக எம்பியின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பையுள்ளது.

….உங்கள் பீமா