Sunday, January 26, 2025
Home > செய்திகள் > ரகசிய கட்டளை..? திடீர் ஜோதிர்லிங்க பூஜைகள்..! விரையும் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள்..!

ரகசிய கட்டளை..? திடீர் ஜோதிர்லிங்க பூஜைகள்..! விரையும் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள்..!

14-12-21/8.33am

இந்தியா : பாரத பிரதமர் மோடி இந்திய வரலாற்றில் சரித்திரத்தை காசியில் மாற்றி எழுதியிருக்கிறார். மேலும் மொகலாயர்கள் படையெடுப்பால் இந்திய கோவில்கள் சிதலமடைந்ததை குறிப்பிட்டு அழிக்க நினைப்பவர்கள் வரலாற்றின் பக்கங்களில் தொலைந்து போனார்கள் என மேற்கோள் காட்டி பேசியுள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் மற்றும் அந்த ஸ்தலங்கள் இருக்கும் இடங்களை சுத்தப்படுத்தவும் புனரமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதை பிரதம அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் ராகுல் காந்தி இந்தியா இந்துக்களின் நாடு என கூட்டத்தில் நேற்று கூறும் அளவிற்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. அதில் 11 ஜோதிர்லிங்கங்களுக்கும் அமைச்சர்கள் மாநில முதலமைச்சர்கள் பூஜை செய்யவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. சோம்நாத் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பூஜை செய்யவேண்டும் எனவும் ஆந்திர பிரதேசம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா கோவிலில் நிர்மலா சீதாராமன் பூஜை செய்யவேண்டும் எனவும்,

`

மத்திய பிரதேசம் ஓம்காரேஸ்வரர் கோவிலில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பூஜை செய்யவேண்டும் எனவும் மத்திய அமைச்சர் முருகன் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலில் பூஜை செய்யவேண்டும் எனவும் 11 ஜோதிர்லிங்கங்கள் கொண்ட 11 கோவில்களில் சிறப்பு பூஜை நடத்த பிரதம அலுவலகம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

```
```

இந்திய வரலாற்றில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத காரியத்தை செய்து காட்டியிருக்கிறார் பாரத பிரதமர் மோடி. மேலும் இந்தியர்களின் கலாச்சாரமும் பண்பாடும் ஆன்மீகத்தை சுற்றியே அமைந்திருக்கிறது என உலகுக்கு எடுத்துரைத்திருக்கிறார்.

……உங்கள் பீமா