14-3-22/10.34am
நர்மதாபுரம் : ஐம்பது வருட பழமையான மசூதி ஒன்றின் மீது காவி பெயிண்ட் அடிக்கப்பட்டதோடு அதன் உட்புறமிருந்த சமாதி மீதும் காவி பெயிண்ட் அடிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
மத்தியபிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டம் மாநில நெடுஞ்சாலை 22ல் அமைந்துள்ளது நர்மதாபுரம். இங்கு ஐம்பது வருட பழமையான மசூதி ஒன்று அமைந்துள்ளது. இதன் பாதுகாப்பாளராக இருப்பவர் அப்துல் சத்தார். இவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “உள்ளூர் இளைஞர்கள் சிலர் மசூதிமீது காவி நிற பெயின்டிங் அடிக்கப்பட்டிருப்பதாக வந்து கூறினார்கள்.

நான் பதறிப்போய் சென்று பார்த்தேன். மசூதியில் உள்ள மரக்கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் கதவுகள் பொருட்கள் அனைத்தும் மாரு ஆற்றில் போடப்பட்டிருந்தன. மசூதி மேல் கூம்பில் மட்டுமல்ல உள்ளிருந்த சமாதி மீதும் காவிநிறத்தை பூசியிருக்கிறார்கள். வளாகத்தில் அமைந்திருந்த குடிநீர் குழாயும் சேதப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய காவல்துறையினர் “இன்று காலை ஆறுமணியளவில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மசூதியை முழுக்க கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளோம். இங்கு முதல் தேவை மசூதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதே. குற்றவாளிகள் மீது 295 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மக்கான் நகரம் முழுவதும் காவல்துறை தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது” என கூறினர்.

கிராமத்துவாசிகள் கூறுகையில் போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு தடுப்பு அமைத்து கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காட்ட சொல்லி எங்களிடம் கூறியுள்ளனர் என தெரிவித்தனர்.
…..உங்கள் பீமா