11-1-22/11.10am
கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த இந்துமுன்னணி ஆதரவாளர்கள் ஈ.வே.ராமசாமி சிலை அவமதிப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.

கோயம்புத்தூர் வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே ஈ.வே.ராமசாமி நினைவு படிப்பகம் ஒன்று உள்ளது. அதன் அருகே சிலை வழிபாட்டை எதிர்க்கும் ஈ.வே.ராமசாமி க்கு பெரிய சிலை ஒன்று திராவிடர் கழகத்தினரால் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையில் காவிப்பொடி தூவி செருப்புமாலை அணிவித்ததாக பரபரப்பை உண்டு பண்ணியது திக குழு.

அதையடுத்து திமுக அரசு கொடுத்த அழுத்தத்தின் பெயரில் காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது. இடதுசாரி மற்றும் ஈ.வே.ராமசாமி ஆதரவாளர்கள் மர்மநபர்களை கைதுசெய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். அதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக மர்மநபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த இருவரை போலீசார் கைதுசெய்தனர்.

கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த அருண் கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜ் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் இந்துமுன்னணி ஆதரவாளர்கள் என தெரியவந்தது. நீதிமன்றத்தில் அவர்களை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் அவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
…….உங்கள் பீமா
#kovai #periyarstatue #vellaloor #coimbatore