Saturday, June 10, 2023
Home > செய்திகள் > திமுக பிரமுகர் செய்த வேலை..! பாய்ந்து பிடிப்பாரா தமிழக டிஜிபி சைலேந்திர பாபு..!?

திமுக பிரமுகர் செய்த வேலை..! பாய்ந்து பிடிப்பாரா தமிழக டிஜிபி சைலேந்திர பாபு..!?

12-12-21/16.59pm

தருமபுரி : திமுக பிரமுகர் ஒருவர் பாரத பிரதமர் நரேந்திர மோடியை தவறாக சித்தரித்து தனது முகநூலில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவாரா என தமிழக மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பெரியாம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் திமுக நிர்வாகியும் கூட. இவர் இன்று பாரத பிரதமர் மரியாதைக்குரிய திரு நரேந்திர மோடி அவர்களை தரக்குறைவாக சித்தரித்த புகைப்படம் ஒன்றை தனது முகநூலில் பகிர்ந்திருப்பதாக இணையத்தில் அந்த ஸ்க்ரீன் சாட்டுடன் செய்திகள் உலவுகின்றன.

பிஜேபியினர் சார்பில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் மனு அளிக்கபட்டுள்ளதாக தெரிகிறது. கருத்து சொல்பவர்களை நள்ளிரவில் தீவிரவாதியை கைது செய்வது போல கொத்தாக அமுக்கிப்பிடிக்கும் காவல்துறை திமுக பிரமுகரை கைது செய்யுமா அல்லது ஆளும் கட்சி என பம்மி விடுமா என பிஜேபியினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

`

மேலும் இவர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மற்றும் தமிழக டிஜிபி முன்வருவார்களா என விமர்சித்து வருகின்றனர்.

….உங்கள் பீமா