12-12-21/15.50pm
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை இன்று ராஜ் பவனில் சந்தித்தார். அவருடன் சில மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 163 கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல பிஜேபியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு கைது செய்திருப்பதாக பிஜேபியினர் பகீர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
மேலும் திமுக அரசு இந்து விரோத போக்கில் செயல்படுவதாகவும் பிஜேபியினரை அழிக்க வேண்டும் என்று செயல்படுவதாகவும் பிஜேபியினர் கூறிவருகின்றனர். எழுத்தாளர் மாரிதாஸின் அவசர கைதை தொடர்ந்து பிஜேபி தலைவர் இன்று தமிழக பிஜேபி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த போராட்டம் அறவழியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பற்றி கவலை தெரிவித்த பிஜேபி தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநரை சந்த்திக்க சென்றார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் “தமிழக ஆளுநர் மதிப்புக்குரிய திரு R.N. ரவி அவர்களை மூத்த தலைவர்களுடன் சென்று சந்தித்தேன். நமது கட்சியின் சமூக வலைதள தொண்டர்களை தொடர்ந்து அச்சுறுத்தியும், தேசியவாதிகளின் குரலை நசுக்கிக் கொண்டு இருக்கும் அறிவாலய அரசினுடைய போக்கை கண்டித்து அறிக்கையாக சமர்ப்பித்தோம்” என கூறினார்.
மேலும் தமிழகத்தில் முப்படை தளபதி இறப்பை கொண்டாடிய இஸ்லாமிய மாணவர்கள் குறித்தும் ஆளுநர் கையை வெட்டுவோம் என கூறிய சுந்தரவல்லி குறித்தும் பாரத பிரதமர் மோடியை “தமிழகத்திற்குள் மோடி நுழைந்தால் பத்திரமாக திரும்ப முடியாது” என கனிமொழி கூறியதையும் ஆளுநரிடம் அண்ணாமலை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இனி அதிரடி நடவடிக்கைகளை பிஜேபி தரப்பு மேற்கொள்ளும் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
…..உங்கள் பீமா