Wednesday, March 19, 2025
Home > செய்திகள் > காருண்யா பல்கலை கழகத்திற்கு சிக்கல்..? தமிழக நிதியமைச்சருக்கு நெருக்கடி..?

காருண்யா பல்கலை கழகத்திற்கு சிக்கல்..? தமிழக நிதியமைச்சருக்கு நெருக்கடி..?

12-12-21/18.20pm

கோவை : யானை செல்லும் வழித்தடங்களை ஆக்கிரமித்து ஜக்கி வாசுதேவ் அவர்கள் தனது ஈஷா மையத்தை எழுப்பியிருக்கிறார் என வதந்திகளை சிலர் திட்டமிட்டு பரப்பி வந்ததாக சொல்லப்படுகிறது. அதே போல காருண்யா பல்கலை கழகமும் வனத்துறை இடத்தை ஆக்கிரமித்திருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஈஷா விஷயத்தில் அதைஉறுதி படுத்தும் வகையில் வனத்துறையின் நிலத்தை ஈஷா ஆக்கிரமித்து இருக்கிறது என தமிழக திமுக நிதியமைச்சர் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார்.

ஆனால் இன்று தமிழக அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உண்மையை கூறியுள்ளது. இது தமிழக நிதியமைச்சருக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் வனத்துறைக்கு சொந்தமான கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலையில் உள்ள நிலங்களை ஈஷா யோகா மையம் மற்றும் ஈஷா அறக்கட்டளை ஆக்கிரமித்து எழுப்பியிருக்கிறதா என கேள்வி கேட்கப்பட்டது.

`

அதற்க்கு பதிலளித்திருந்த தமிழக அரசு ஈஷா யோகா மையமோ அல்லது அறக்கட்டளையோ வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படவில்லை. மேலும் எந்த ஒரு ஆக்கிரமிப்பில் ஈஷா மையம் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்நிலையில் இதே கோயம்புத்தூர் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் காருண்யா பல்கலை கழகம் புறம்போக்கு நிலங்கள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறது அதனால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

```
```

….உங்கள் பீமா