Sunday, December 3, 2023
Home > செய்திகள் > மர்ம மார்கத்தினர் அட்டூழியம்..! சட்டீஸ்கரில் 144 தடை உத்தரவு..!

மர்ம மார்கத்தினர் அட்டூழியம்..! சட்டீஸ்கரில் 144 தடை உத்தரவு..!

காங்கிரஸ் தலைமையிலான சட்டீஸ்கரில் இன்று காலை இந்து கோவிலுக்கு அருகே இருந்த கொடியை கம்பத்தில் ஏறி மர்ம மார்கத்தினர் பிய்த்து எறிந்தனர். அதையடுத்து அங்கே வன்முறை நிலவும் சூழல் ஏற்பட்டது.

இந்த விபரீத சம்பவம் சட்டீஸ்கர் மாநிலம் கவார்தா பகுதியில் நிகழ்ந்துள்ளது. கர்த்தா பகுதியில் வரவிருக்கும் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை ஒட்டி அருகிலுள்ள துர்கா கோவிலின் அருகே கம்பம் நடப்பட்டு அதில் கொடியேற்றியதாக கூறப்படுகிறது.

அதை கவனித்த மர்ம மார்க்கத்தினர் அந்த கொடிமரத்தில் ஏறி அந்த கொடியை பிய்த்து எறிந்தனர். பின்னர் கீழே போட்டு அவமதிப்பு செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் அந்த மர்ம மார்க்கத்தினரை தாக்க ஆரம்பித்தனர்.

`

அந்த மர்ம கும்பல் தலைதெறிக்க ஓடியது. அதன் பின்னர் மாற்று மதத்தினர் தங்கள் கொடியை ஏற்றியதாக தெரிகிறது. மீண்டும் கலவரம் ஏற்படும் சூழல் நிலவவே அந்த பகுதியில் காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

```
```

காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலத்திலும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்ந்து தாக்கப்படுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.

#hiduphobia #rahulgandhi #chhattisgarh