Thursday, June 20, 2024
Home > செய்திகள் > கோவில்களில் இனி மணி அடிக்க கூடாது..! காவல்துறை சுற்றறிக்கை..?

கோவில்களில் இனி மணி அடிக்க கூடாது..! காவல்துறை சுற்றறிக்கை..?

16-2-22/16.20pm

கர்நாடகா : கர்நாடகாவில் சில இஸ்லாமிய மாணவிகள் தொடங்கிவைத்த ஹிஜாப் பிரச்சினை இந்தியாவெங்கும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்நிலையில் கோவில்களுக்கு காவல்துறை அனுப்பிய சுற்றறிக்கை மேலும் பதட்டத்தை கூட்டியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள கோவில்களுக்கு நேற்று பெங்களூரு காவல்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதோடு மட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அதில் கோவில்களில் ஆரத்தி மற்றும் பூஜைகளில் மணிகளை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 மற்றும் ஒலிமாசு சட்டப்பிரிவு 2010ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் பசவராஜ் பொம்மை இதுகுறித்த விளக்க அறிக்கை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

`

இதுகுறித்து பேசிய ஹிந்து அமைப்புகள் “நாங்கள் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். ஹிஜாப் பிரச்சினையை மூடிமறைக்க காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டுள்ளதா என சந்தேகம் வலுக்கிறது.

மற்ற மத வழிபாட்டு தலங்களில் வராத ஒலிமாசு ஹந்துக்களின் கோவில்களில் வருகிறதா. நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களா அல்லது அகதிகளா” என கேள்வியெழுப்புகின்றனர்.

```
```

ஆனால் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனந்த் சிங் குறிப்பிடுகையில் ” கோவில்கல் பூஜைகளில் மணியை பயன்படுத்த தடைவிதித்திருப்பதாக சொல்லப்படுவது தவறான செய்தி. அதுபோல எந்த ஒரு அறிக்கையும் காவல்துறை வெளியிடவில்லை” என தெரிவித்துள்ளார்.

….உங்கள் பீமா