Friday, April 19, 2024
Home > செய்திகள் > தெலுங்கானா : அஸ்ஸாம் முதல்வர் மீது வழக்கு பதிவு..!

தெலுங்கானா : அஸ்ஸாம் முதல்வர் மீது வழக்கு பதிவு..!

16-2-22/12.50pm

தெலுங்கானா : தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பிஜேபி அரசு அஸ்ஸாமில் ஆட்சிநடத்தி வருகிறது. ராகுல் காந்தியின் பொய்யான கருத்துக்களுக்கு ஹிமந்தா தக்க பதிலடி கொடுத்து வருகிறார். அதேநேரத்தில் புலவாமா தாக்குதல் நினைவுதினத்தையொட்டி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து மீண்டும் சந்தேகத்தை கிளப்பியிருந்தார் ராகுல்.

மேலும் பிரதமர் மோடி சொன்னது போல 15 லட்சம் மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தினாரா என கேள்வியெழுப்பியிருந்தார். இதற்க்கு பதிலடியாக சோனியா மற்றும் ராகுலை ஹிமந்தா விமர்சித்திருந்தார். மேலும் பொய்யான தகவல்களை கூறிவரும் ராகுல் மீது 500 இடங்களில் வழக்கு தொடுக்கப்படும் என கூறியிருந்தார்.

`

இந்நிலையில் டிபிசிசி கட்சி தலைவரான ரேவந்த் ரெட்டி என்பவர் ஹிமந்தா மீது பெண்களை அவமதித்ததாக ஹைதராபாத் ஜூபிலி காவல்நிலையத்தில் புகாரளித்தார். ஹிமந்தா பிஸ்வாசர்மா மீது இந்திய தண்டனை சட்டம் 504 மற்றும் 505(2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை விமர்சித்தால் எப்படி ஒரு பெண்ணை அவமானப்படுத்தியதாகும் என்கிற கேள்விக்கு ரேவந்த் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மேலும் பாரத பிரதமர் மோடி எந்த ஒரு கட்டத்திலும் 15 லட்சம் கணக்கில் செலுத்துவோம் என கூறவில்லை.

```
```

https://youtu.be/i1Lw53W_AkM

ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் 15 லட்சம் செலுத்தும் அளவிற்கு கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்றே கூறினார் என பிரதமர் மோடி 2014 தேர்தலின் போது பேசிய வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

…..உங்கள் பீமா