Tuesday, April 22, 2025
Home > செய்திகள் > இதிலுமா ஊழல்..? வெளிவந்த டாஸ்மாக் ரகசியம்..!

இதிலுமா ஊழல்..? வெளிவந்த டாஸ்மாக் ரகசியம்..!

11-01-2022..12.05pm

சென்னை : கடந்த ஆறுமாதங்களில் பலதுறைகளில் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும்வேளையில் டாஸ்மாக் ஒப்பந்தத்தில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மொத்தம் 5410 உள்ளது. இந்த மதுபானக்கடைகளுக்கான சேமிப்புக்கிடங்குகள் தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் 43 இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சேமிப்புக்கிடங்குகளில் இருந்து டாஸ்மாக்கிற்கு மதுபானங்களை எடுத்துச்செல்ல கனரக வாகனங்கள் வருட ஒப்பந்தமுறையில் நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்நிலையில் கடந்தவார்டும் போட்ட ஒப்பந்தம் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த வருடத்திற்கான ஒப்பந்தங்கள் சிபாரிசு முறையில் வழங்கப்படுவதாகவும் ஆளும்கட்சியினருக்கு வேண்டப்பட்ட லாரிகள் உரிமையாளருக்கே ஒப்பந்தம் போடப்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே பார் உரிமம் திமுகவினருக்கே கொடுக்கப்படுவதாக வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

`

மேலும் திமுகவின் நிர்வாகத்திறமையின்மையை எடுத்துக்கட்டும்விதமாக திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் மூன்று மாத சம்பளம் வழங்கப்படாததால் இந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட இந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக பழிவாங்குகிறது என அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.

```
```

தமிழகத்தில் இயங்கிவரும் பல பார்களின் உரிமம் திமுகவினர் வசம் இருப்பதாகவும் பல முக்கிய கம்பெனிகளின் டெண்டர்கள் திமுகவினருக்கே வழங்கப்படுவதாகவும் தொடர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர் அதிமுகவினர்.

….உங்கள் பீமா