Monday, January 30, 2023
Home > செய்திகள் > SSI பூமிநாதன் கொலை வழக்கு..! சிறுவர்களை கைது செய்து மர்ம நபர்களை காப்பாற்ற துடிக்கிறதா விடியல்..?

SSI பூமிநாதன் கொலை வழக்கு..! சிறுவர்களை கைது செய்து மர்ம நபர்களை காப்பாற்ற துடிக்கிறதா விடியல்..?

22-11-21/13.57PM

திருச்சி : நேற்று முன்தினம் ஆடுகளை திருடும் கும்பலை பிடிக்க சென்ற SSI பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தனிப்படை அமைத்து தீவிர வேட்டை நடத்திய காவல்துறை தற்போது மூன்று இளம் சிறுவர்களை கைது செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திருச்சியில் ஆடு திருடும் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட SSI பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்ததுடன் மேலும் இரண்டு சிறுவர்களை கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என கைது செய்துள்ளது. நாகை மாவட்டம் சந்தைவெளி கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் குகன் எனும் கல்லூரி பயிலும் மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவ தினத்தன்று நாவல்பட்டு போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு சிலர் ஆடுகளை இருசக்கரவாகனத்தில் வைத்து கடத்திப்போய்க்கொண்டிருந்தனர். அந்த கும்பலை பின்தொடர்ந்த பூமிநாதன் அந்த கும்பலை சுற்றிவளைத்தார். ஆடு திருடிய கும்பல் தப்பித்துவிட அவர்களுக்கு துணையாக வந்த கும்பல் தப்பிவிட்டது.

`

அந்த கும்பல் தாங்கள் மறைத்துவைத்திருந்த கத்தியால் சராமாரியாக குத்தியதில் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த வழக்கில் தஞ்சை மாவட்டம் தோகூர் பகுதியை சேர்ந்த இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் இரு சிறுவர்களை விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. அவர் தன்னுடைய அறிக்கையில் “திடகாத்திரமான காவல்துறை அதிகாரியை 10 வயது சிறுவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. வழக்கமாக தென்மாவட்டங்களில் இதுபோன்ற ஒவ்வொரு பெரிய சம்பவத்திற்குப் பின்பும், கணக்கிற்காக இளஞ்சிறார்களைக் காண்பித்து அந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதே வாடிக்கை.

குற்றவாளிகள் இளஞ்சிறார்கள் என்று சொல்லப்பட்ட பின்பு, அவர்கள் கடும் தண்டனை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. காவல்துறையின் விசாரணையின் மூலம் உண்மையும் வெளிவரும் என்ற நம்பிக்கை துளியளவும் இல்லை. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

மர்ம நபர்களை காப்பாற்ற விடியல் அரசு சிறுவர்களை பலிகடா ஆக்கியதா என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிவருகின்றன.

…..உங்கள் பீமா