Friday, September 22, 2023
Home > செய்திகள் > தியேட்டருக்கு அனுமதி..! திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு தடையா..?

தியேட்டருக்கு அனுமதி..! திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு தடையா..?

16-11-21/ 8.00am

திருவண்ணாமலை : தமிழக திமுக அரசு தியேட்டர்களில் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் நாளை நடைபெற இருக்கும் திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு தடை விதித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திமுக அரசு இந்து விரோத போக்கை கடைபிடித்துவருவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். ஒரு பிராந்திய மக்களின் முதல்வராக இருக்கும் முக ஸ்டாலின் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் எந்த ஒரு பண்டிகைக்கும் திருவிழாவிற்கும் வாழ்த்து சொல்ல மறுத்து தனது கடவுள் மறுப்பு கொள்கையை பெரும்பான்மை சமுதாயத்தினரிடம் மட்டும் காண்பிக்கிறார் என இந்து அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

`

இந்நிலையில் நாளை 17-11-21 புதன்கிழமை முதல் வருகிற சனிக்கிழமை 20-11-21 வரை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் தரிசனம் செய்யவும் கிரிவலம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. திருவண்ணாமலை கோவிலில் கிடைக்கும் வருமானங்கள் அதன் சொத்துக்கள் மீதே திமுக அரசு கண்ணாயிருக்கிறது என திருவண்ணாமலை பக்தர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவு வரும் முன்னர் ஊரடங்கு நேரத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் முக ஸ்டாலின் மகளான செந்தாமரை மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரரை வணங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர்கள் பொது மக்கள் கூடும் இடங்கள் என அனைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதியில்லை என்ற இந்த அறிக்கை பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

…உங்கள் பீமா