Saturday, July 27, 2024
Home > செய்திகள் > இந்திய விமானப்படையின் 89ஆவது ஆண்டு விழா குட்டி ஸ்டோரி..! சிறப்பு புகைப்பட தொகுப்பு..!

இந்திய விமானப்படையின் 89ஆவது ஆண்டு விழா குட்டி ஸ்டோரி..! சிறப்பு புகைப்பட தொகுப்பு..!

உலகின் நான்காவது பெரிய விமானப்படையான இந்திய விமானப்படையின் 89வது ஆண்டு கொண்டாட்டம் இன்று சிறப்பாக நடைபெறுகிறது. இந்திய மக்கள் விமானப்படை வீரர்களுக்கு தங்களது அன்பு கலந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வருடம் கொரனோ பாதிப்பு உச்சத்தில் இருந்த போது விமானப்படையின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. கொரோனா காலத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக விமானப்படையின் விமானங்கள் அவர்கள் மீது வானிலிருந்து மலர்தூவி மரியாதை செய்தது நெகிழ்ச்சியான மறக்க முடியாத சம்பவம்.

இந்திய வான்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. நமது இந்திய விமானப்படை தோராயமாக 1,70,000 வீரர்களை கொண்டுள்ளது. உத்தேசமாக 1130 போர்விமானங்களும் 1700 மற்ற விமானங்களும் பயன்பாட்டில் உள்ளன.

`

இரண்டாம் உலகப் போர்(1939-1945) காலகட்டத்தில் இந்திய விமானப்படையின் பங்களிப்பு அபரிமிதமானது. வடக்கு தாய்லாந்தில் அமைந்திருந்த ஜப்பானிய விமானப்படை தளங்களான மே ஹோங் சன், சியாங் மை மற்றும் சியாங் ரேய் மீது தாக்குதல் நடத்தியும் அரோகனில் இருந்த ஜப்பான் ராணுவத்தலங்களின் மீதும் தனது துல்லிய தாக்குதலை தொடுத்து ஜப்பானை நிலைகுலைய செய்தது இந்திய விமானப்படை.

மேலும் வேவுபார்த்தல் வெடிகுண்டு வீசும் விமானங்களுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்றவற்றில் நமது விமானப்படை சீரிய பங்கை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று தனது 89 ஆவதுபிறந்த தினத்தை கொண்டாடும் இந்திய விமானப்படைக்கு தேசபக்தர்களின் நன்றி கலந்த வணக்கங்களை உரித்தாக்குகிறோம்.

```
```

……உங்கள் பீமா

#airforcedayoct8 #india #iaf