Friday, March 29, 2024
Home > அரசியல் > மம்தாவுக்கு பின்னடைவு..!! சுவேந்து அதிகாரி ஜஸ்ட் எஸ்கேப்..!

மம்தாவுக்கு பின்னடைவு..!! சுவேந்து அதிகாரி ஜஸ்ட் எஸ்கேப்..!

மேற்குவங்க அரசியல் களம் தற்போது சூடுபிடித்திருக்கிறது. 2018ல் சுவேந்து அதிகாரியின் மெய்க்காப்பாளர் குழுவில் இருந்த சுபப்ரதா சக்ரபர்ட்டி என்ற துணை காவல் ஆய்வாளர் குடும்ப பிரச்சினையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னுடைய சர்வீஸ் ரிவால்வரை வைத்து தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.

பணியில் இருந்தபோது இறந்து போனதால் வழக்கை விசாரித்த காவல்துறை அவரது மனைவி உட்பட சிலரை சாட்சியாக விசாரித்தது. முடிவில் தற்கொலை என்பது உறுதிசெய்யப்பட்டு வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில் சுவேந்து அதிகாரி திரிணாமூல் காங்கிரசிலிருந்து பிஜேபிக்கு மாறினார்.

கடந்த தேர்தலில் நந்திகிராமில் பிஜேபி சார்பில் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்டு மம்தாவை தோற்கடித்தார். அதைத்தொடர்ந்து மம்தா முதல்வராவதில் சிக்கல் ஏற்பட்டது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் வேறு தொகுதியில் நின்று எம் எல் ஏ வாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.

`

அதனால் கடுப்பான மம்தா மெய்க்காப்பாளர் தற்கொலை வழக்கை தூசிதட்டி எடுத்து சுவேந்து அதிகாரியை வழக்கின் குற்றவாளியாக கோர்த்துவிட்டார். CID அந்த வழக்கில் சுவேந்து அதிகாரியை விசாரணைக்கு இன்று அழைத்திருந்தது. இந்நிலையில் கொல்கொத்தா உயர்நீதிமன்றம் சுவேந்து அதிகாரியை முகாந்திரம் இல்லாமல் வழக்கில் இணைத்திருப்பதாக கூறி சுவேந்து அதிகாரியை கைது செய்ய தடை விதித்து தீர்ப்பளித்தது.

இது மம்தாவுக்கு பின்னடைவு என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. மேலும் வரவிருக்கும் பபானிபூர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் மம்தா போட்டியிடுகிறார். இதில் வென்றால் மட்டுமே மம்தா முதல்வராக நீடிக்க முடியும்.

```
```

மம்தாவுக்கு எதிராக மீண்டும் சுவேந்து அதிகாரி பபானிபூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குகிறார். இது மம்தாவுக்கு குடைச்சலை கொடுத்திருக்கிறது. அதனால் சுவேந்து அதிகாரி முதல் அனைத்து பிஜேபி தலைவர்களையும் கடுமையாக தாக்கி பேச ஆரம்பித்திருக்கிறார்.

இதுகுறித்து மேற்குவங்க பிஜேபி தலைவர் அமித் மாளவியா ” பிஜேபியை தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பபானிபூர் தொகுதியை கைவிட்டுவிட்டு நந்திக்ராமில் போட்டியிட்டு சுவேந்து அதிகாரியிடம் தோற்றுப்போனார். அதே போல இந்த முறையும் பபானிபூர் மக்கள் தக்க தண்டனை தருவார்கள்”. என கூறினார்.