15-4-22/9.18AM
சென்னை : ஜாதிக்கட்சியான விடுதலை சிறுத்தை கட்சி நேற்று அம்பேத்கார் பிறந்த தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்த வந்த பிஜேபி தொண்டர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைதுசெய்யவேண்டும் என இருதரப்பினரும் கூறிவருகின்றனர்.
எங்கள் தொண்டர்கள் கண்ணிலே எனக்கு பயம் தெரியவில்லை, நல்ல சமுதாயத்தை படைப்பதற்கான முயற்சி தெரிந்தது. -பிஜேபி தலைவர் அண்ணாமலை
இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டரில் “கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் நான் காலை (11.30மணி) மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டுத் திரும்பினேன்.அப்போது அங்கே குழுமியிருந்த பாஜகவினர் பாரத்மாதாகி ஜே என கூச்சலிட்டுக்கொண்டே திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விசிக கொடிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்த விசிகவினர் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் தமிழ்க்கதிர் என்பவர் உட்பட மூன்றுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள சனாதனக் கும்பலான பாஜகவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.
இதற்க்கு பதிலடி கொடுத்த பிஜேபி தலைவர் அண்ணாமலை ” அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்த வாரிசாக பாரதிய ஜனதா கட்சி இன்று வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறது. எத்தனை காலம் மக்களை உங்களுடைய பொய் புரட்டுகளை வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள். எங்களுடைய தொண்டர்களை உங்கள் கட்சியினர் தாக்கியது எனக்கு மிகுந்த மன வேதனை அளித்தாலும் கூட,உங்களுடைய தொண்டர்கள் தவறான வழிகாட்டுதலின் பால் அதை செய்கின்றார்கள் என்றும் எனக்கு தெரியும்.
எங்கள் தொண்டர்கள் கண்ணிலே எனக்கு பயம் தெரியவில்லை, நல்ல சமுதாயத்தை படைப்பதற்கான முயற்சி தெரிந்தது.
நீங்கள் சொல்லுகின்ற நேரத்திலே, சொல்லுகின்ற இடத்திலே தமிழக பிஜேபி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாரதிய ஜனதா கட்சியின் இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது, எப்படி நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அவரிடம். வாழ்க்கையை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன்.
இடத்தையும் நேரத்தையும் நீங்கள் கூறுங்கள். நன்றி. வணக்கம்” என பதிவிட்டுள்ளார்.
….உங்கள் பீமா