29-11-21/ 15.58pm
டெல்லி : பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றதை தொடர்ந்து விவசாயிகள் என கூறிக்கொள்ளும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர்களின் நோக்கம் வேறாய் இருந்தது. பாராளுமன்றத்தில் காலிஸ்தான் கொடியை ஏற்றவேண்டும் என்பதே அது.

பிரதமர் மோடியின் ஒவ்வொரு அசைவிற்குப் பின்னாலும் நாட்டின் பாதுகாப்பு நாட்டு ஒளிந்திருக்கும். அன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும்போது பிரதமர் கூறிய வார்த்தை மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அவர் ” நாட்டு மக்களின் நலன் கருதியும் நாட்டின் பாதுகாப்பு கருதியும்” என்கிற வார்த்தையை ஆணித்தரமாக அழுத்தமாக கூறினார்.

அதன் பொருளை இந்திய மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். கடந்த நவம்பர் 15 அன்று சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் ஹவுன்ஸ்லோ அலுவலகம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அந்த அலுவலகம் பிரிட்டிஷ் பொலிஸாரால் சோதனையிடப்பட்டு அங்கு வெடிகுண்டுகள் மற்றும் பயங்கரவாத பொருட்கள் மற்றும் போலி அடையாள அட்டைகளை உருவாக்கும் மின்னணு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த அமைப்பில் உள்ள இருவர் பாகிஸ்தானுடன் தொடர்பிலிருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் காலிஸ்தான் கொடியை இந்திய பாராளுமன்றத்தில் ஏற்றுபவருக்கு பல கோடி பரிசு என அறிவித்த அமைப்பும் இதுவே. இந்த அமைப்பின் வாங்கி கணக்கு மற்றும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டாலும் போராட்டம் தொடரும் என அறிவித்திருந்த போராட்டக்காரர்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது.

இதுவரை போராட்டம் என அறிவித்த அந்த குழு தற்போது வெளிநாட்டு நிதி வருவது தடைப்பட்டவுடன் போராட்டத்தை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி செய்ய இப்போது யாரும் இல்லாத காரணத்தால் போராட்டம் எனும் பெயரில் கும்மாளம் அடிக்க வாய்ப்பில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா