Friday, June 2, 2023
Home > செய்திகள் > தீவிர ஆதரவாளரான மாரிதாஸ் கைதுக்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவிக்காதது ஏன்..? வலுக்கும் சர்ச்சை..!

தீவிர ஆதரவாளரான மாரிதாஸ் கைதுக்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவிக்காதது ஏன்..? வலுக்கும் சர்ச்சை..!

13-12-21/12.16pm

சென்னை : திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் மற்றும் தீவிர ஆதரவாளரான எழுத்தாளர் மாரிதாஸ் கைது குறித்து ரஜினிகாந்த் எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எந்த ஒரு நிகழ்வானாலும் சுட்டிக்காட்டி வெளிப்படையாக பேசும் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் விவகாரத்தில் சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்து விட்டனர் என குரல் கொடுத்தார். அப்போது அவருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி தோழமை கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு ரஜினிகாந்துடன் மல்லுக்கு நின்றனர். இந்த வார்த்தைக்காக நீதிமன்ற படியேறும் அளவிற்கு பூதாகாரமாக்கப்பட்டது.

அந்த நேரத்தில் ரஜினிகாந்திற்கு ஆதரவாக அவர்தரப்பு நியாயங்களை தனது வீடியோக்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் மாரிதாஸ். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் சிஸ்டம் சரியில்லை என பற்றவைத்தார். இப்படி தொடர்ந்து தன மனதிற்கு தோன்றுவதை வெளிப்படையாக பேசிவந்த ரஜினிகாந்த் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே படங்களும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

`

என் மேல் காவி சாயம் பூசாதீர்கள் என படபடவென பொரிந்து அவசர அவசரமாக பிரஸ் மீட் வைத்து சொன்னவர் தனது ஆதரவாளரான மாரிதாஸ் கைதுக்கு ஏன் மௌனம் சாதிக்கிறார் என மதுரை மாவட்ட ரஜினி ரசிகர்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என கூறியவர் மாரிதாஸை தனது வீட்டிற்கே அழைத்து பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா