Friday, March 24, 2023
Home > செய்திகள் > மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி..? தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மீது புகார்..?

மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி..? தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மீது புகார்..?

13-12-21/13.00pm

சென்னை : தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு புகார் ஒன்றை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ளனர்.

தமிழக டிஜிபி சைலேந்திர பாபு குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக திமுக ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர். இதில் நாடார் ஜெனரேஷன் எனும் அமைப்பு “நம் நாடார் இனம் சேர்ந்த சைலேந்திர பாபு அய்யா உடன் நின்று ஒற்றுமை காட்ட வேண்டும்.இல்லை என்றால் இதுபோன்ற சங்கிகள் நம்மை பகடை காயாய் பயன்படுத்துவார்கள். உண்மையான நாடார்கள் அனைவரும் பாஜகவில் இருந்து விலகவேண்டும்” என பதிவிட்டுள்ளது.

இதற்க்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள் ” இதே நாடார் சமூகத்தை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜனை பரட்டை என சொன்ன போதும், அவரை உருவ கேலி செய்த போதும் தூங்கிக் கொண்டிருந்தீர்களா” என கேள்வியெழுப்பியிருக்கின்றனர். இன்னும் சவுக்கு சங்கர் எனும் ஒருவன் “அண்ணாமலை சைலேந்திரபாபுவையும் தமிழக காவல்துறையும் அசிங்கப்படுத்திவிட்டார் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளான்.

`

இதற்க்கு பதிலடி கொடுத்த நெட்டிசன்கள் அவன் சைலேந்திர பாபு குறித்து தவறாக பதிவிட்ட பதிவு ஒன்றை மீண்டும் பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆதரவு அமைப்பான தேசிய முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் தலைவர் சிவா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில் “தமிழக காவல்துறை குறித்தும் தமிழக டிஜிபி சைலேந்திர பிபாபு குறித்தும் அண்ணாமலை பேசிய தரக்குறைவான வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை மதக்கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார். அவர்மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

….உங்கள் பீமா