Thursday, March 28, 2024
Home > செய்திகள் > தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஞ்சலிஸ்ட் என்.ஜி.ஓ உரிமம் ரத்து..! உள்துறை அமைச்சகம் அதிரடி..!

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்டியன் இவாஞ்சலிஸ்ட் என்.ஜி.ஓ உரிமம் ரத்து..! உள்துறை அமைச்சகம் அதிரடி..!

18-12-21/15.58pm

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக மூன்று என்.ஜி.ஓ உரிமங்களை ரத்து செய்துள்ளது. அதில் ஒன்று தமிழகத்தை சேர்ந்த எவாஞ்சலிஸ்ட் மிஷனரி அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

வாதோராவை தலைமையிடமாக கொண்ட இஸ்லாமிய என்.ஜி.ஓ அமைப்பான ஆப்மி மற்றும் தமிழக்த்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இவாஞ்சலிஸ்ட் என்.ஜி.ஓ வான நியூ ஹோப் பவுண்டேஷன் மற்றும் கர்நாடகாவை தலைமையிடமாக கொண்ட ஹோலி ஸ்பிரிட் மினிஸ்ட்ரீஸ் ஆகிய மூன்று அமைப்புகள் FCRA சட்டதிட்டங்களை மீறி வெளிநாட்திலிருந்து நிதிஉதவி பெற்றிருக்கின்றன.

`

மேலும் வாங்கிய நிதியை கணக்கில் காட்டாமல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு கிறித்த என்.ஜி.ஒ க்களும் சர்ச்சைக்குரிய நன்கொடையாளரான கோஸ்பல் பார் ஆசியா விடமிருந்து பலகோடி நிதி முறைகேடாக பெற்றதாக தொடர் குற்றசாட்டு எழுந்தது. அதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வந்த வேளையில் விசாரணையில் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

```
```

கர்நாடகா கிறித்தவ மிஷனரி 2017-18 மற்றும் 2019-20ல் மட்டும் வெளிநாட்டு நிதியாக முறைகேடாக 49 கோடி பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேபோல தமிழகத்தை சேர்ந்த நியூ ஹோப் பவுண்டேஷன் இதே கால கட்டத்தில் 42 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றுள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது. அதையடுத்து நேற்று மேற்கண்ட மூன்று அமைப்புகளின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து அறிவித்துள்ளது.

…..உங்கள் பீமா