11-4-22/13.11PM
சென்னை : தமிழக முதலமைச்சர் மீது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான கே.என்.நேரு அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

BIGNEWS : கோவிட்19 பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க விண்ணப்பிக்க கால வரம்பு நிர்ணயித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன். போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல் மற்றும் சாதிரீதியாக அதிகாரியை திட்டியது உட்பட சில சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டார். அவரின் துறை சிவசங்கர் வசம்சென்றது. அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காததால் அமைச்சர் நேரு உட்பட பலர் திமுக தலைவர் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

மேலும் மத்திய மண்டலத்தில் செந்தில்பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் அமைச்சர்களாக இருக்கையில் சிவசங்கரும் வந்துவிட்டதால் கே.என்.நேரு அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் சேப்பாக்கம் எம்.எல்.ஏவுமான உதயநிதிக்கு உள்ளாட்சித்துறை ஒதுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்காரணமாக நேருவிடம் நகர்ப்புற நிர்வாகத்துறையையும் பெரியக்கருப்பனிடமிருந்து ஊரகவளர்ச்சித்துறையும் பறிக்கப்பட்டு உள்ளாட்சித்துறை என்ற பெயரில் உதயநிதிக்கு வழங்கப்போவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவுகளால் மேலிடத்தின்மீது அமைச்சர் கே.என்.நேரு கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
…..உங்கள் பீமா
