Sunday, January 26, 2025
Home > செய்திகள் > நெட்டிசன்கள் செய்த வேலை..! பறிபோன அதிகாரிகள் வேலை..!

நெட்டிசன்கள் செய்த வேலை..! பறிபோன அதிகாரிகள் வேலை..!

21-12-21/11.43am

திருச்சி : தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாடும் நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.

மேலும் இந்த பாலியல் அத்துமீறல்களில் மாணவிகள் பயிலும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளே ஈடுபட்டிருப்பது பெற்றோர்களை மட்டுமல்ல தமிழக மக்களையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கெல்லாம் மூல காரணம் போதை என ஒரு உளவியல் அறிக்கை குறிப்பிடுகிறது. மதுக்கடைகளை இழுத்து மூடி மதுவிலக்கை பூரண அமுல்படுத்தாவிட்டால் சமூக குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனிடையே கொரோனா காலத்திலும் திறந்து வைக்கப்பட்ட டாஸ்மாக்கின் கடை மூடும் நேரம் தற்போது நீடிக்கப்பட்டிருப்பது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இது இப்படி இருக்க பாரதபிரதமர் மோடியின் திட்டமான வீடு தேடி கல்வி என்கிற திட்டத்தை முன்னெடுத்த தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என பெயரிட்டு தமிழகம் முழுவதும் அதிகாரிகளை நியமித்தது.

`

அந்த குழுவில் திருச்சியை சேர்ந்த ஒரு நபர் அரசு வாகனத்துடன் அரசு அளித்த சீருடையுடன் பட்டப்பகலில் டாஸ்மாக் சென்று மதுபாட்டில்களை வாங்கியது பரபரப்பை கிளப்பியது. இதை வீடியோ எடுத்த ஒருவர் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார். அதையடுத்து இந்தியா முழுவதும் அந்த வீடியோ வைரல் ஆனது. அதை தொடர்ந்து திருச்சி இல்லம் தேடி கல்வி திட்டத்தின் அதிகாரியான ஷர்மிளா சங்கர் மற்றும் அந்த குழு பணியாளர்கள் அனைவரும் அந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

```
```

முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் நேரடியாக தலையிட்டு அனைவரையும் பணிநீக்கம் செய்துவிட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள திறமை மிகுந்த இளைஞர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என திருச்சி மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

……உங்கள் பீமா