சுப்ரமணிய சாமி பழைய நிலைமைக்கு திரும்பிவிட்டார் என நெட்டிசன்கள் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் அவரை தாக்கியும் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து ஒன்று லிபெரல்ஸ்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறது. அவரது பதிவில் குறிப்பிட்டதாவது, ” டெக்ஸ்சாஸ் மாகாணம் கருக்கலைப்பை தடை செய்ய உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவில் தலையிட எங்களுக்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சூப்பர் தாராளவாதிகளான நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள். இந்துத்துவா பழமைவாதிகள் அதிகமாகிவிட்டனர் என கதறப்போகிறீர்களா” என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில் ஒருவர் லிபெரல்ஸ்களாகிய நாங்கள் 2024ல் ஆட்சியை பிடிப்போம் என பின்னூட்டம் இட்டுள்ளார். அதற்க்கு பதிலடியாக சு.சாமி “நீங்கள் கவலைப்படாதீர்கள். அவர்கள் கண் உங்கள் மீதே இருக்கிறது. உங்களைப்போன்ற தாராளவாதிகள் தாலிபான்களிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் என ஹிந்துத்வவாதிகளான எங்களிடம் பிச்சையெடுப்பீர்கள்.” என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
…உங்கள் பீமா