Friday, June 2, 2023
Home > செய்திகள் > கொரோனாவை அண்டை மாநிலங்களுக்கு பரப்புகிறதா கேரளா..? அச்சுறுத்தும் பின்னணி..!

கொரோனாவை அண்டை மாநிலங்களுக்கு பரப்புகிறதா கேரளா..? அச்சுறுத்தும் பின்னணி..!

கேரளாவிலிருந்து வெளியேறும் கோழிக்கழிவுகள் மற்றும் மருத்துவக்கழிவுகள் கேரளா எல்லையை தாண்டி தமிழக எல்லைக்குள் கொட்டுவது வழக்கம். பல வாகனங்கள் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டிருப்பதாக எல்லையோர மக்கள் கூறுகின்றனர். அதே போல கொரோனாவையும் பரப்புகிறதா என பொதுமக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தியாவில் கொரோனா அதிகம் பரவி வந்த காலகட்டத்தில் கேரளா தனது எல்லைகளை மூடியது. வெளி மாநிலத்தவர் உள்ளே நுழைய கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனால் பல் மக்கள் கேரளாவில் மாட்டிக்கொண்டு தவித்த சம்பவமும் அரங்கேறியது.

தற்போது மற்ற மாநிலங்களில் சீனத்தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்க கேரளாவில் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பலர் கோவிட் நெகட்டிவ் என போலி சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு அண்டை மாநிலங்களுக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது.

`

இதனை நிரூபிக்கும் வகையில் கர்நாடகா மாநிலம் கோலாரில் உள்ள நர்சிங் காலேஜ் ஒன்றில் 63 பேர் கொரோனா பாசிட்டிவ் என தெரிய வந்துள்ளது. அந்த மாணவிகளை விசாரித்ததில் கோவிட் நெகடிவ் என போலியான சான்றிதழ் சமர்ப்பித்ததும், அவர்கள் அனைவரும் கேரளாவிலிருந்து வந்ததும்விசாரணையில் தெரிய வந்தது. இங்கு 28 மற்றும் 29 ல் நடத்தப்பட்ட பரிசோதனையில் கேரளாவை சேர்ந்த 30 பேர் தொற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் 30 ல் நடத்தப்பட்ட பரிசோதனையில் 32 பேர் மாட்டிக்கொண்டனர்.

இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் கூறுகையில் “அந்த கல்லூரிக்கு சென்று நிர்வாகத்திடம் எச்சரிக்கை கொடுத்துள்ளேன். மேலும் கடுமையான நடவடிக்கைகள் அந்த நிர்வாகத்தின் மேல் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

“தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தொற்று குறைந்திருக்கும் வேளையில் கேரளாவின் இந்த மாதிரியான விபரீத செயல் பல மக்களின் உயிரை குடித்துவிடும். தமிழகம் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.” என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

…உங்கள் பீமா