Monday, December 2, 2024
Home > செய்திகள் > காணாமல் போன மோடி எதிர்ப்பு..! மத்திய அரசின் திட்டங்களை பெறுவதில் முன்னணியில் தமிழகம்..!!

காணாமல் போன மோடி எதிர்ப்பு..! மத்திய அரசின் திட்டங்களை பெறுவதில் முன்னணியில் தமிழகம்..!!

இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரேமாதிரியான திட்டங்களை மத்திய பிஜேபி அரசு கொண்டுவருகிறது. அது ஓய்வூதிய திட்டமோ, பிரதமர் மோடி வீடு திட்டமோ, வங்கி கணக்கில் நேரடியாக பணம் பெறும் முறையோ அல்லது இலவச கேஸ் இணைப்பு, கல்விக்கடன், தொழில் தொடங்க முத்ரா கடன் என எதுவாக இருந்தாலும் பயனடைவதில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதில் எந்த மத பாகுபாடோ சாதி பாகுபாடோ இல்லாமல் அனைவரும் சலுகையை பெற்றுக்கொள்கின்றனர்.

ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக மோடி எதிர்ப்பு என்ற பிம்பத்தை வலிந்து திணிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஆம் நாங்கள்தான் வலிந்து மோடி எதிர்ப்பு பிம்பத்தை கட்டமைக்கிறோம் என மனம் திறந்து உண்மையை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் இன்று மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழகம் இந்தியாவிலேயே ஐந்தாவது மாநிலமாக இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில்,அடல் ஓய்வூதிய திட்டத்தில் இணைந்தவர்களின் எண்ணிக்கை 3.30 கோடியை கடந்தது, முதல் 5 இடங்களில் தமிழகம் உள்ளது.

`

இந்திய அரசின் உத்தரவாதம் பெற்ற அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 2021-22 நிதியாண்டில் 28 லட்சத்திற்கும் அதிகமான புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த கணக்குகளின் எண்ணிக்கை 2021 ஆகஸ்ட் 25 நிலவரப்படி 3.30 கோடியை கடந்துள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை, இது வரை மொத்தம் 24,55,438 பேர் அடல் ஓய்வூதிய திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, அதிகம் பேர் இணைந்துள்ள 11 மாநிலங்களில் தமிழகம் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், பிகார், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் உள்ளன. 2021 ஆகஸ்ட் 25 வரையிலான மொத்த உறுப்பினர்களில், 78 சதவீதம் பேர் ரூ 1000 ஒய்வூதிய திட்டத்தையும், 14 சதவீதம் பேர் ரூ 5,000 ஒய்வூதிய திட்டத்தையும் தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்த உறுப்பினர்களில் 44 சதவீதம் பெண்களாக உள்ளனர். சுமார் 44 சதவீதம் பேர் 18-25 வயதுடைய இளம் வயதினர் ஆவர்.

```
```

அடல் ஓய்வூதிய திட்டத்தின் செயலியில் சமீபத்தில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அடல் ஓய்வூதிய திட்டத்தின் மக்கள் சாசனம் மற்றும் தகவல் குறிப்பேடு 13 பிராந்திய மொழிகளில் தற்போது கிடைக்கிறது.” என தெரிவித்துள்ளது.

..உங்கள் பீமா