4-1-22/14.47pm
காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டையை அடுத்து உள்ள காவேரிப்பக்கத்தில் அமைந்துள்ள பழமையான அம்மன் கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது.
காவேரிப்பாக்கம் அடுத்து அத்திப்பட்டு கிராமம் அமைத்துள்ளது. இந்த கிராமத்தில் பழமையான துர்க்கையம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் பரிகாரஸ்தலம் என கூறப்படுகிறது. இங்கு ஆடிமாதம் நடக்கும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் ஆசியைப் பெற்றுக்கொள்வர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் இந்த கோவிலில் குவிந்தனர். அன்று இரவு பூஜைகள் முடிந்தபின்னர் கோவில்நடையை வழக்கம்போல சாத்திவிட்டு அர்ச்சகர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின்னர் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அம்மனின் சூலம் மற்றும் நவக்கிரக சிலைகளை உடைத்துள்ளனர்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவேரிப்பாக்கம் ஆய்வாளர் மணிமாறன் அங்கு பக்தர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்து மத கடவுள்கள் மீது மட்டும் வெறுப்பை காண்பிக்கும் பெரியார் கொள்கைப்பிடிப்பாளரான முக ஸ்டாலினின் ஆட்சியில் தொடர்ந்து இந்து கோவில்கள் மட்டுமே குறிவைக்கப்படுவது பலத்த சந்தேகத்தை கிளப்புகிறது என இந்து அமைப்பினர் விமர்சித்து வருகின்றனர்.
….உங்கள் பீமா