01-01-2022
வேலூர் : ஈவ் டீசிங் செய்த நபரை தட்டிக்கேட்ட வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்குலைந்து விட்டதாய் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் வேளையில் கடந்த ஒரே வாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகம் மெல்ல மெல்ல அதன் தனித்தன்மையை கடந்த ஆறுமாதங்களில் இழந்திருப்பதாய் நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில் பள்ளி கல்லூரி மாணவிகளே கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மொத்தமாரிக்குப்பம் பகுதியை சேர்ந்த வினீத் எனும் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வினீத் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக விடுமுறையில் வந்த அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதே நேரத்தில் அதே ஊரை சேர்ந்த ஆகாஷ் என்பவர் பெண்களை கேலி செய்து சீண்டி வந்திருக்கிறார். அதை வினித் தட்டிகேட்டிருக்கிறார்.
இதனால் ஆகாஷ் மற்றும் வினீத்துக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ஆகாஷ் தான் ஒளித்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வினித்தை குத்தியுள்ளான். இதில் படுகாயமடைந்த வினித் சமத்துவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வினித் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த படுகொலைக்கு காரணமாக இருந்த ஆகாஷ் மற்றும் அவரது தந்தை அசோகன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் குடியாத்தம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. நேற்று திமுகவில் இருந்து பிஜேபியில் இணைந்த வேல் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்த கொலை சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
…..உங்கள் பீமா