19-12-21/11.11am
அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம் பாகிஸ்தானிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அமிர்தசரஸ் பொற்கோவில். கோவிலில் நேற்று மாலை நடந்த பூஜையின் போது ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

சீக்கியர்களின் புனிதஸ்தலமான பொற்கோவிலில் தர்பார் குருபூஜைகள் வழக்கம் போல நடந்து கொண்டிருந்தன. சீக்கிய குருமார்கள் அவர்களின் புனித நூலான கிரந்த சாஹிப்பை வைத்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்பை தாண்டி கருவறைக்குள் குதித்தார்.

மேலும் சீக்கியர்களின் புனித நூலான புனித கிரந்த சாஹிப்பை தனது கிர்பானால் அடித்தார். அங்கிருந்த தங்க கிர்பானை எடுத்தார். இதெல்லாம் சில விநாடிகளில் நடந்தது. உடனே அருகிலிருந்த சீக்கியகுருமார்கள் அந்த மர்மநபரை பிடித்து அடித்து SGPC ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து SGPC தலைமையகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிறிது நேரத்தில் அவரது சடலம் தலைமையக வாசலில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சீக்கியர்கள் அவரது மரணத்தை கொண்டாடி முழக்கங்கள் எழுப்பினர். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது. சீக்கியர்களின் இந்த செயல் பலரது வெறுப்புக்கு ஆளாகியிருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
…..உங்கள் பீமா