Wednesday, May 25, 2022
Home > செய்திகள் > யாருக்கு போட்டியாக கடையை திறக்கிறார் பிரசாந்த் கிஷோர்..?

யாருக்கு போட்டியாக கடையை திறக்கிறார் பிரசாந்த் கிஷோர்..?

5-5-22/12.22PM

புதுதில்லி : அரசியல் வியூக நிபுணர் என்றும் அரசியல்வாதிகளின் சோசியல் மீடியா ஏஜென்ட் என்றும் வர்ணிக்கப்படும் பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கப்போவதுகிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் வருகிற அக்டோபர் 2 பாதயாத்திரை பீகாரில் இருந்து தொடங்கும் என அறிவித்துள்ளார்.

யாருக்கு போட்டியாக கடையை திறக்கிறார் பிரசாந்த் கிஷோர்..?

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் காங்கிரசில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரசில் சேர்வதில்லை என்று முடிவெடுத்த பிரசாந்த் ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சி தொடங்கவுள்ளதாக ஊடகங்களில் யூகங்கள் வெளியானது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிகே,

“பிஹாரில் உள்ள சாம்பரானில் இருந்து 3000 கிலோமீட்டர் பாதயாத்திரையை அக்டோபர் 2ம் தேதி மேற்கொள்ளவிருக்கிறோம். ஊடகத்தின் யூகப்படி இப்போது கட்சிக்கான பணியை ஆரம்பிக்கவில்லை. ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தால் அது எனது பெயரில் இருக்காது. ஆனால் கட்சி தொடங்குபவர்களுடன் நான் ஒத்துழைப்பேன்” என கூறினார்.

இதுகுறித்து பிஹார் முதல்வர் நிதிஷ் கூறுகையில் எனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறினார். லல்லுபிரசாத் கூறுகையில் இது தோல்வியிலேயே முடியும் என கூறியுள்ளார். அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் ஜன் சுராஜ் இயக்கத்தை பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீஹாரிலேயே ஆரம்பிக்க நினைக்கிறார். அதன் முதல்படியே இந்த பாதயாத்திரை என கருத்து தெரிவிக்கின்றனர்.

….உங்கள் பீமா

Leave a Reply

Your email address will not be published.

விளம்பரம்





This will close in 20 seconds

error: Content is Protected! © The Madras Telegram