Friday, March 24, 2023
Home > செய்திகள் > அதிரடி காட்டும் அரசு..! இந்து என்கிற வார்த்தை பள்ளிகளில் நீக்கம்…!

அதிரடி காட்டும் அரசு..! இந்து என்கிற வார்த்தை பள்ளிகளில் நீக்கம்…!

30-11-21/13.30pm

சென்னை : அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் இந்து என்கிற வார்த்தை நீக்கப்பட்டு சிறுபான்மையல்லாதவர் என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்த சிவசேனா மகாராஷ்டிராவில் காங்கிரசின் சொல்லுக்கேற்ப செயல்படுவதாக மக்கள் கூறி வருகின்றனர். ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது தயால்சந் என பெயர் மற்றம் செய்யப்பட்ட அடுத்த நாளே மஹராஷ்டிரா சிவசேனா அரசு மாநில அளவில் வழங்கப்படும் விருதுகளுக்கு ராஜிவ் காந்தி பெயரை சூட்டியது.

மேலும் மஹராஷ்டிரா விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தபோதுஅதை தனது அதிகாரத்தால் முதல்வர் உத்தவ் தாக்ரே மிரட்டினார் என செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் காங்கிரசுடன் சேர்ந்து இந்துக்களுக்கு எதிரான செயலில் சிவசேனா ஈடுபட்டு வருவது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்து என்கிற வார்த்தையை அகராதியில் இருந்து நீக்கி அழகு பார்த்திருக்கிறது சிவசேனா அரசு.

`

மஹாரஷ்டிராவில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்ட பாடத்திட்டங்களில் இந்துக்கள் என்ற சொல்லை அகற்றி விட்டு பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையல்லாதோர் என குறிப்பிட்டிருக்கிறது. இந்த தகவல் தற்போது வெளிவந்து மஹாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

….உங்கள் பீமா