30-11-21/12.53pm
சென்னை : நான் கலைஞரின் மகனில்லையா என முக ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். அதை தற்போது நிரூபித்துவிட்டார் என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்துக்களுக்கு எதிரான போக்கை கடைப்பிடிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்த முதல் வாரத்திலேயே இரண்டு இந்துக்களின் கோவில்கள் தர்த்தெறியப்பட்டது. மேலும் இதுவரை 150க்கும் மேற்பட்ட கோவில்கள் இடித்து தகர்க்கப்பட்டிருப்பதாக இந்து அமைப்புகள் தொடர் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றன. இதை நிரூபிக்கும் வகையில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் பகுதியிலுள்ள பழமையான கோவில் ஒன்றை இடித்து தரைமட்டமாகியது.
அதே பகுதியில் அரசியல்வாதி ஒருவர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்பியிருப்பதை மாவட்ட ஆட்சியரோ நகராட்சி நிர்வாகமோ கண்டுகொள்ளவில்லை. மேலும் சில சர்ச்சுகளும் கட்டப்பட்டிருக்கிறது அதையும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்துக்களின் கோவில் தான் அரசின் கண்களுக்கு தெரிகிறதா என கிலாய் கிராம மக்கள் கொந்தளிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழருக்கு எதிரான செயலில் திமுக ஈடுபட்டு வருவதாக எதிர் கட்சியினர் விமர்சனத்தை முன்வைக்கின்றனர். தமிழர் பெருமையை பறைசாற்றிய ராஜராஜ சோழனின் சதயவிழா நாளை மாற்றிக்கூறிய திமுக இப்போது தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் மாற்ற முயற்சிக்கிறது என குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.
தமிழரின் புதுவருட பிறப்பான சித்திரை ஒன்று என்பதை மறைந்த கலைஞர் கருணாநிதி மாற்றியமைத்தார். மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சித்திரை மாதம் தமிழ்ப்புத்தாண்டு என நடைமுறைப்படுத்தினார். இப்போது முக ஸ்டாலின் மீண்டும் அதே சர்ச்சையை கிளப்பி தமிழரின் மனதை புண்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார் என தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழக அரசு சார்பில் பொங்கலுக்கு ரேஷனில் மக்களுக்கு வழங்கப்படும் பரிசுப்பைகளில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் என அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழர்களிடையே பெருத்த கொந்தளிப்பை உண்டுபண்ணியுள்ளது.
…..உங்கள் பீமா