Friday, September 22, 2023
Home > செய்திகள் > திருச்செந்தூரில் பரபரப்பு..! பக்தரின் செல்போனை உடைத்த அதிகாரி..?

திருச்செந்தூரில் பரபரப்பு..! பக்தரின் செல்போனை உடைத்த அதிகாரி..?

26-12-2021/ 15.07pm

திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வந்த பக்தர் ஒருவரின் செல்போனை உயரதிகாரி ஒருவர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் முருகப்பெருமான் தரிசனத்திற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். அறநிலையத்துறையை சேர்ந்தவர்கள் சிறப்பு தரிசனத்திற்கு மட்டும் அனுமதி வழங்கி பல மணிநேரமாக சிறப்பு தரிசன பக்தர்களை மட்டும் அனுமதித்துள்ளனர்.

பொது தரிசனத்திற்காக கால்கடுக்க பல மணிநேரம் நின்ற முதியவர்கள் குழந்தைகள் என பலர் சோர்வாகி மயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போதும் கூட பொது தரிசனத்திற்கு அனுமதிக்காமல் கோவில் ஊழியர்கள் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அதையடுத்து பக்கதர்களில் சிலர் கோவில் ஊழியர்களிடம் நியாயம் கேட்க ஆரம்பித்தனர்.

`

அப்போது அங்கு கோவிலின் உயரதிகாரி ஒருவர் வந்துள்ளார். அவரிடமும் பக்தர்கள் முறையிட்டுள்ளனர். இந்த சம்பவத்தை ஒரு பக்தர் தனது விலையுயர்ந்த போனில் படம் பிடித்துள்ளார். அதை கண்டு கோபமடைந்த அதிகாரி அந்த செல்போனை பிடுங்கி கீழே வீசி உடைத்துள்ளார். மேலும் பக்தர்களை தரக்குறைவாகவும் திட்டியதாக கூறப்படுகிறது.

இதை ஒரு பெண்பக்தர் தட்டிக்கேட்க அவரை காவலாளிகள் சமாளித்து வெளியே அனுப்புவதிலேயே குறியாய் இருந்தனர் என அந்த வீடியோ பதிவுகள் எடுத்துரைக்கிறது. பக்தர்களுக்கு தரிசன அனுமதி மறுக்கப்படுவதும் பக்தர்கள் தாக்கப்படுவதும் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது என இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

…..உங்கள் பீமா