Monday, February 10, 2025
Home > செய்திகள் > நெகிழ்ந்த துப்புரவு பணியாளர்கள்..! பிரதமர் மோடி செய்த காரியம்..!

நெகிழ்ந்த துப்புரவு பணியாளர்கள்..! பிரதமர் மோடி செய்த காரியம்..!

11-1-22/9.24am

வாரணாசி : உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் அமைந்துள்ளது 12 ஜோதிர்லிங்கங்களில் மிக முக்கியமான காசிவிஸ்வநாதர் திருக்கோவில். கடந்த மாதம் பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆகியோர் கோவில் விழாவில் கலந்து கொண்டனர்.

e

இதனிடையே அங்கு சென்ற பிரதமர் அங்குள்ள துப்புரவு பணியாளர்களுக்கு தனது மரியாதையை செலுத்தினார். அதனால் அங்குள்ள பணியாளர்கள் பிரதமரின் செய்கையை மனதார பாராட்டினர். இந்நிலையில் கோவில் பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் வெற்று காலில் கோவில் வளாகத்தில் பணிபுரிவதை கண்ட மோடி பெரும் மனக்கஷ்டத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.

`

கோவில் வளாகங்களில் ரப்பர் மற்றும் தோல் வகையிலான காலணிகளை அணிந்து செல்லக்கூடாது என்பது மரபு. இதனால் பிரதமர் மோடி தற்போது அங்குள்ள பணியாளர்களுக்கு ஜூட் வகை காலணிகளை அனுப்பிவைத்துள்ளார். பனிக்காலங்களில் வெற்றுக்காலுடன் கோவில் வளாகங்களில் பணிபுரிவது சிரமம் என கருதிய பிரதமர் இந்த வகை செருப்புக்களை துப்புரவு பணியாளர்கள் ஊழியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

```
```

பிரதமரின் இந்த செயலை கோவில் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் பிரதமர் அனுப்பிய ஜூட் வகை காலணிகளை பரிசளித்தனர்.

….உங்கள் பீமா