3-12-21/12.11pm
சென்னை : பள்ளிகளில் இறைவணக்கத்தை தவிர்க்க பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மேலும் தமிழகத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
திமுக அரசு ஆட்சிபொறுப்பேற்ற நாளிலிருந்து இந்துவிரோத போக்கை கடைப்பிடித்து வருவதாக இந்து அமைப்பினர் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது தமிழக மக்களும் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்திருந்த திமுக அரசு இந்துக்களின் கோவில்களில் மட்டும் பக்தர்கள் நுழைய தடை விதித்திருந்தது.
மேலும் அனைத்து மத வழிபாட்டு தளங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்கயில் இந்துக்களுக்கு மட்டும் தடையை நீட்டிப்பது சரியா என கேள்வியெழுப்பிவருகின்ப்ட்ரானர். இதனிடையே திருவண்ணாமலை புனித ஸ்தலத்தில் கிரிவலத்திற்கு அனுமதி அளித்துள்ள திமுக அரசு குபேர லிங்க தர்சினத்திற்கு மட்டும் தடை விதித்து பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக திருவண்ணாமலை மக்கள் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில் ஓமிக்ரான் வைரஸை காரணம் காட்டி பள்ளி உயர்கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில் “இறைவணக்கம் கலாச்சார நிகழ்வு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது. தியேட்டர்களிலும் மால்களிலும் அத்தனை பேர் கூடும் சட்டசபையிலும் வராத ஓமிக்ரான் பள்ளியில் மட்டும் வந்துவிடுமா என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அதை காரணம் காட்டி பள்ளிகளின் ஒழுக்கம் பண்பாடு ஆகியவற்றில் அரசு தலையிட கூடாது எனவும் தெரிவிக்கின்றனர்.
…..உங்கள் பீமா