Monday, February 10, 2025
Home > செய்திகள் > மெரிட்டில் தேர்ச்சி பெற்றால் அது மேல்சாதி ஆதிக்கம்..? சர்ச்சையை கிளப்பிய நீதிபதி..!

மெரிட்டில் தேர்ச்சி பெற்றால் அது மேல்சாதி ஆதிக்கம்..? சர்ச்சையை கிளப்பிய நீதிபதி..!

8-12-21/ 14.06 pm

இந்தியா : இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. பொது சிவில் சட்டம் வேண்டும் என பலமான குரல்கள் எழும்பத்தொடங்கியிருக்கின்றன.

இட ஒதுக்கீட்டின்படி ஐஐடி கல்லூரிகளில் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறிய அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. ஐஐடியில் சேர்ந்த மாணவர்களில் 63% சதவிகித மாணவர்கள் தங்களது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த மாணவர்களால் மெரிட்டில் தேர்ச்சி பெற்று இடம் கிடைக்காமல் போன மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே தொடர்கிறது. தகுதி இருந்தும் மிகசிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும் இந்த கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அரசியலால் பல தகுதியுள்ள மாணவர்களின் எதிர்காலம் சிதைந்து போவதாக பெற்றோர்கள் நலச்சங்கம் கருத்து தெரிவிக்கிறது.

`

மேலும் ஒரு நீதிபதி கூறியிருக்கும் ஒரு கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லியை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் தலித் ஸ்டடிஸ் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட அம்பேத்கர் நினைவு நாள் கூட்டத்தில் பேசிய நீதிபதி சந்த்ர சௌத் “மெரிட்டில் தேர்ச்சிபெற்று மாணவர்கள் நுழைவது மேல் சாதியினரின் ஆதிக்கத்தை காட்டுகிறது” என சர்ச்சையை கிளப்பியுள்ளார். மாணவர்களுக்கு சாதி மதம் மொழி என எந்த பாகுபாடும் இல்லை.

```
```

கல்விகற்கும் அனைவரும் மாணவர்கள் என்ற ஒரே சாதியின் கீழ் இருக்கும்போது ஒரு முதிர்ச்சிபெற்ற அனுபவசாலியான நீதிபதியின் இந்த கருத்து அனைவரயும் கவலையடைய செய்துள்ளது. நீதிபதியின் கூற்றுப்படி மெரிட்டில் தேர்ச்சி பெற்று வருபவர்களால் சமூகம் சீர்குலைகிறது என்ற பொருள் தொனிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் சாதி சான்றிதழ் ஒழிப்பை நீதிபதிகள் கையிலெடுப்பார்கள் சமூக மாற்றத்தை கொண்டுவருவார்கள் என நினைக்கையில் இது போன்ற ஒரு மூத்த நீதிபதியின் கருத்து சமூக நல்லிணக்கத்தை குலைப்பதாக உள்ளது என மேலும் தெரிவிக்கின்றனர்.

…..உங்கள் பீமா